வங்காளதேசம் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் 3 வது T20 யார் பக்கம் வெற்றி

Bangaldesh vs West Indies
Bangaldesh
vs West Indies

இதுவரை நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் ஆட்டம் தான் கோப்பையை வெல்லப்போவது யாரென்று நிர்ணயிக்கும்.

முதல் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.இந்த ஆட்டத்தில் ஷெல்டன் காட்ரல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேசம் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியா தீவுகள் அணியை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தி சாகிப் அல்ஹஸன் 42 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்:

முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்துள்ள காரணத்தால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மேற்கு இந்திய தீவுகள். இருப்பினும் டி20 போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் ஒரு வலுவான அணியாக வலம் வருகின்றது.

மேற்கு இந்திய தீவுகள்:

மேற்கு இந்திய தீவுகள் சார்பில் சாய் ஹோப், ரோவ்மன் பவல், கீமோ பால் மற்றும் ஷெல்டன் காட்ரல் ஆகியோர் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டபோதிலும் லெவிஸ், ப்ராத்வாட், டேரன் பிராவோ மற்றும் ஹெட்மேயர் ஜொலிக்க தவறிவிட்டனர்.

முக்கிய வீரர்கள்:சாய் ஹோப்(55 ரன் -23 பந்துகள்)

வங்காளதேசம்:

வங்காளதேசம் சார்பில் சாகிப் அல்ஹஸன்.முகமதுல்லாஹ் மற்றும் லிட்டான் தாஸ் ஆகியோர் பேட்டிங்-ல் நன்றா செயல்பட்டாலும் அவர்களின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும் படி சிறப்பாக செயல் படவில்லை. முஸ்தீப் ரஹ்மான் மட்டும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்துகிறார். ருபேல் ஹூசைன் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதால் அவர்களின் பௌலிங் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய வீரர்கள்:சாகிப் அல்ஹஸன்(5 விக்கெட்)

இடம்: வங்காளம் vs வெ.இண்டிஸ், 2 வது T20I, ஷேர் பங்லா தேசிய அரங்கம், டாக்கா

நாள்: டிசம்பர் 22, 2018, சனிக்கிழமை

ஆடுகளத்தின் தன்மை:அதிக பனி விழும் காரணத்தால் ஆடுகளம் பௌலிங் செய்வதற்கு சாதகமாக அமையாது. அதே நேரத்தில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

சாத்தியமான 11 வீரர்கள்:

மேற்கு இந்திய தீவுகள்: லூயிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெட்மியர், ரோவன் பவல், டாரன் பிராவோ, கார்லோஸ் ப்ரத்வாட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், கெமோ பால், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்

வங்காளதேசம்:தமீம் இக்பால், லிட்டான் தாஸ், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன்,மஹ்முதுல்லா ரஹிம், மஹ்முதுல்லாஹ், அரிபுல் ஹக், முகமது சைஃபுடின், மெதிடி ஹசன்,முஸ்தாபிஜூர் ரஹ்மான், அபு ஹைடர் ரோனி(ரூபல் ஹொசைன்)

வீரர்கள் விவரம்:

மேற்கு இந்திய தீவுகள்: லூயிஸ், ஷைன் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ரோவ்மன் பவல், டாரன் பிராவோ, கார்லோஸ் ப்ரத்வாட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், கீமோ பால், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், கரி பியர், ஷெர்பான் ரூதர்போர்ட், டெனெஷ் ராம்டின், கேஸ்ரிக் வில்லியம்ஸ்

வங்காளதேசம்:தமீம் இக்பால், லிட்டான் தாஸ், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன்,மஹ்முதுல்லா ரஹிம், மஹ்முதுல்லாஹ், அரிபுல் ஹக், முகமது சைஃபுடின், மெதிடி ஹசன்,முஸ்தாபிஜூர் ரஹ்மான், அபு ஹைடர் ரோனிமுகமது மிதுன், ரூபல் ஹொசைன், , நாஸ்முல் இஸ்லாம்

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now