2019 ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாச்தில் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்புள்ளது என்று நிரூபித்துள்ளது.
விராட் கோலி, ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் கேப்டன்சி போட்டிகள் ஒரு முனையில் இருந்தாலும் மறு முனையில் ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இரண்டு அதிரடி துவக்க வீரர்களுள் நடைபெற்ற போட்டியில் ஷிகர் தவான் சதமடித்து அசத்தினர்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்கை விட நன்றாக பந்து வீசினார் ஜஸ்ப்ரிட் பும்ரா. உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாஹலின் பந்துவீச்சு சிறப்பான முறையில் தொடர மறுமுனையில் ஆடம் சம்பா விக்கெட் வீழ்த்த முடியாமல் தவித்தார்.
ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அணி இப்போட்டியிருந்து எடுத்து கொள்ளவேண்டிய 3 நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
1. அனுபவம் வாய்ந்த பேட்டிங் :
ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடி வருபவர் ஷிகர் தவான். கடினமான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்க தவறினாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 117 ரன்களை குவித்து அசத்தினர். இவரின் ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 352 ரன்களை சேர்த்தது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளைப் போல் இந்திய அணியிடம் நீண்ட பேட்டிங் வரிசை இல்லாத போதிலும் இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் மிகவும் பக்குவம் வாய்ந்த வீரர்களாகவே திகழ்கின்றனர். தேவைப்படும் பொழுது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேட்ஸ்மென்கள் தங்களது இடங்களை மாற்றி விளையாடும் திறனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கியமான தருணத்தில் ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்தில் அதிரடியாக ரன் சேர்த்தது இந்திய அணிக்கு பெரிதும் உதவின. இந்திய அணிக்கு நிலையான துவக்கம் தரும் ரோஹித் மற்றும் தவான் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக ரன்களை சேர்ப்பதிலும் வல்லவர்கள்.
முதலில் பொறுமையாக விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலி கடைசி கட்ட ஓவரிகளில் அதிரடியாக ஆட தொடங்கினார். இவரை பின் தொடர்ந்து வந்த தோனி மற்றும் ராகுலும் தங்களது பங்கிற்கு அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.
இதன் மூலம் இந்திய அணி தனிநபர் சாதனையை முன்வைக்காமல் ஒவ்வொருவரும் அணிக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடி வருவதால் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
2. துல்லியமான பீல்டிங் :
இந்திய அணியின் பீல்டிங் தரமானது மிகவும் சிறப்பானதாகவே உள்ளது, இதற்கு சான்றாக ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிட் விக்கெட் திசையிலிருந்து வந்த ஜடேஜா நலுவவிடாமல் பிடித்ததாகும்.
ஜடேஜா இப்போட்டியில் மாற்று வீரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு கேட்சை தன்வசப்படுத்தி அசத்தினர். இதுமட்டுமின்றி, புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் கேட்ச் வாய்ப்பு ஏற்பட்டது அப்போது தோனி முன்புறம் டைவ் செய்ததன் மூலம் எளிதாக கேட்சை பிடித்து அசத்தினார். இவற்றின் மூலமாகவே இந்திய அணியின் பீல்டிங் தரத்தை எளிதாக உணரலாம்.
ஒருபுறம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது மறுபுறம் பீல்டர்களும் சிறப்பாக செயல் படுவதால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எளிதாக 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
3. கவனமான பந்துவீச்சு:
சஹால் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் இந்த உலக கோப்பை தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இருப்பினும், இந்திய அணியின் வேகபந்து வீச்சை பொருத்தே இந்திய அணியின் உலககோப்பை கனவின் வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை. பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான பின்ச் மற்றும் வார்னரை அதிக ரன்கள் சேர்க்க விடாமல் கட்டுப்படுத்தினர், இதன் மூலம் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை அதிக ரன்களை சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் சிறப்பான முறையில் முதல் 10 ஓவர்களை வீசினார். இப்போட்டியில் பும்ரா கவாஜாவை வீழ்த்தினார், புவனேஸ்வர் குமார் ஒரே ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஸ்டானிஸை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி, கடைசி கட்ட ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியின் கீப்பர் கேரி அதிரடியாக விளையாடி கொண்டிருக்கும் பொழுது பம்ரா வழக்கம் போல் யார்க்கர் போன்ற பந்துகளை கொண்டு ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.
இப்போட்டியில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறந்த பார்மில் உள்ள இருவரும் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்ப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் சிறந்து விளங்கிய இந்திய அணி இதை போலவே பின்வரும் போட்டிகளில் சிறப்பாக செயல் படும் பட்சத்தில் இந்தியா அணி எளிதாக கோப்பை வென்று சாதிக்கலாம்.