3. கவனமான பந்துவீச்சு:
சஹால் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் இந்த உலக கோப்பை தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இருப்பினும், இந்திய அணியின் வேகபந்து வீச்சை பொருத்தே இந்திய அணியின் உலககோப்பை கனவின் வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை. பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான பின்ச் மற்றும் வார்னரை அதிக ரன்கள் சேர்க்க விடாமல் கட்டுப்படுத்தினர், இதன் மூலம் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை அதிக ரன்களை சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் சிறப்பான முறையில் முதல் 10 ஓவர்களை வீசினார். இப்போட்டியில் பும்ரா கவாஜாவை வீழ்த்தினார், புவனேஸ்வர் குமார் ஒரே ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஸ்டானிஸை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி, கடைசி கட்ட ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியின் கீப்பர் கேரி அதிரடியாக விளையாடி கொண்டிருக்கும் பொழுது பம்ரா வழக்கம் போல் யார்க்கர் போன்ற பந்துகளை கொண்டு ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.
இப்போட்டியில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறந்த பார்மில் உள்ள இருவரும் இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்ப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் சிறந்து விளங்கிய இந்திய அணி இதை போலவே பின்வரும் போட்டிகளில் சிறப்பாக செயல் படும் பட்சத்தில் இந்தியா அணி எளிதாக கோப்பை வென்று சாதிக்கலாம்.