யுவராஜ் சிங் கடந்த சீசனில் கிங்ஸ்XI பஞ்சாப் அணியில் விளையாடினார். தற்போதைய சீசனுக்கான வீரர்கள் தேர்வில் அவர் அந்த அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.இவருடன் ஆரோன் ஃபின்ச்சையும் சேர்த்து வெளியேற்றியுள்ளது பஞ்சாப் அணி நிர்வாகம்.யுவராஜ் சிங்கிற்கு கடந்த சீசன் சரியானதாக அமையவில்லை.6 போட்டிகளில் பங்கேற்று 65 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது.ஆட்டத்திறன் குறைவு மற்றும் வயது முதுமையால் பஞ்சாப் அணி முதுபெரும் வலது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கை வெளியேற்றியுள்ளது.
ஆரம்பத்தில் முதல் 5 ஐ.பி.எல் சீசன்களில் யுவராஜ் சிங் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு முன்னனி வீரராக அணியில் இடம் பெறுவார்.அவர் ஐ.பி.எல் ஏலத்தில் பெரும் தொகைக்கு அனைத்து அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு எடுப்பர்.ஆனால் தற்சமயம் அவரது மோசமான ஆட்டத்தால் அவரை வாங்கிய 2 கோடிக்கு ஒப்பானவர் அல்ல எனத் தீர்மானித்துப் பஞ்சாப் அணி அவரை வெளியேற்றியுள்ளது.
ஆனால் அவர் சில மாதங்களுக்கு முன் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் அவரை ஐ.பி.எல் அணியில் எடுக்க இந்த மூன்று அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணிக்கு வழக்கம்போலக் கடந்த ஐ.பி.எல் சீசனும் மிக மோசமான ஒன்றானதாகவே அமைந்தது.2018 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 6 போட்டிகளை மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 6 வது இடத்தைப் பெற்றிருந்தது. பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால் ஆரம்பத்தில் நடைபெற்ற போட்டிகளில் சில தோல்வியைத் தழுவியது பெங்களூரு அணி.
பெங்களூரு அணி கோரி ஆண்டர்சன், மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை கடந்த சீசனில் சொதப்பிய காரணத்தால் வெளியேற்றியுள்ளது.இந்திய ஆல் ரவுண்டர் என யாரும் இந்த அணியில் தற்சமயம் இல்லை.எனவே யுவராஜ் சிங்கை வரும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.யுவராஜ் சிங் ஏற்கனவே 2014 பெங்களூரு அணியில் 14 போட்டிகளில் விளையாடி 376 ரன்களை குவித்துள்ளார்.
அவர் 2014 சீசனில் 3 அரை சதங்கள் மற்றும் அதிகபட்சமாக 83 ரன்களையும் விளாசியுள்ளார்.பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியம் இவருக்குச் சரியாகச் செட் ஆகியுள்ளது.எனவே அவரை அணியில் எடுத்தால் அவருடைய அற்புதமான ஆட்டத்திறனை வெளிபடுத்த வாய்ப்புகள் உள்ளது.இது அவருக்கு ஒரு நல்ல உதவிகரமாக ஆட்டத் திறனை மேம்படுத்தமட்டும் உதவாமல் 2019 உலகக் கோப்பைக்குத் தேர்வாக ஒரு நல்ல வழியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி அணிக்கு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து தற்சமயம் வரை சோதனைக்காலமாவே அமைந்து வருகிறது.அந்த அணியின் நிர்வாகம் நிறைய மாற்றங்களைச் செய்தும் அந்த அணியினால் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை.கடந்த ஐபிஎல் சீசனில் அதிகப்படியான மாற்றத்துடன் டெல்லி அணி களமிறங்கிய போதிலும் அணியின் மோசமான ஆட்டத்திறன் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.இந்த ஐபிஎல் சீசனிலும் நிறைய மாற்றங்களை டெல்லி அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கௌதம் காம்பீர், ஜீனியர் தாலா, மேக்ஸ் வெல், ஜேசன் ராய், பிளன்கட், குற்கிட் சிங் மான், நாமன் ஓஜா, முகமது சமி, சயாஸ் கோஸ், டேனியல் கிறிஸ்டின் போன்றோர் கடந்த சீசனில் சொதப்பியதால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அனுபவ வீரர் என டெல்லி அணியில் யாரும் இல்லாத காரணத்தால் யுவராஜ் சிங்கை அந்த அணி வரும் ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது.யுவராஜ் சிங் ஏற்கனவே 2015 ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் 14 போட்டிகளில் விளையாடி 249 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அனுபவம் வாய்ந்த யுவராஜ் சிங் டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டால் ஒரு சிறந்ததாக வாய்ப்பாக டெல்லி அணிக்கு அமையும்.அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் கேப்டன்களுக்கு யுவராஜின் அனுபவம் கேப்டன்ஷிப்பில் வழிநடத்த ஒரு உதவியாக அமையும்.
#3.கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் சிறப்பான தொடக்கத்தை வெளிபடுத்தியது.அந்த அணி 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தைப் பெற்றது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கொல்கத்தா அணியின் முன்னணி வெளிநாட்டு வீரர்களான ஜான்ஸன், டாம் குரான், ஸ்ட்ராக் ஆகியோரை வெளியேற்றியுள்ளது.ஸ்ட்ராக் கடந்த ஐபிஎல் சீசன் முழுவதும் காயம் காரணமாக விளையாடவில்லை.ஜான்ஸன் கடந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
ரசல், சுனில் நரைன் போன்ற வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் மட்டுமே அந்த அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.கொல்கத்தா அணி நிர்வாகம் இந்திய ஆல் ரவுண்டர்களை தேடி வருகிறது.அதனால் கொல்கத்தா அணி யுவராஜ் சிங்கிற்கு இந்த வாய்ப்பை வரும் ஐபிஎல் சீசனில் வழங்கலாம். ஈடன் கார்டன் ஆடுகளம் ஸ்பின் பௌலிங்கிற்கு சாதகமாக அமையும்.யுவராஜ் சிங் ஸ்பின் பௌலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்துவார்.அதனால் கொல்கத்தா அணிக்கு யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
எழுத்து : துருவ
மொழியாக்கம் : சதிஷ் குமார்