இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் : ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியை வெல்ல பின்பற்ற வேண்டிய 3 யுக்திகள் 

Australia v India
Australia v India

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டி20 போட்டி பிப். 24ஆம் தேதியும் மற்றும் ஒருநாள் போட்டி மார்ச் 2 இரண்டாம் தேதியும் அன்றும் துவங்க உள்ளது.

முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் தொடரை வென்று பழிவாங்க காத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கு முன்பு இந்தியா அணி பங்கேற்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் இதுவே.

சென்ற முறை இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 1-4 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்திருந்தது. பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமே.

இருப்பினும், ஆஸ்திரேலியா அணி கீழ்வரும் 3 யுக்திகளை பயன்படுத்தும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 தொடர்களை வெல்லலாம்.

#3 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டம்

Mohammed Shami
Mohammed Shami

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். குறிப்பாக முகமது ஷமி, ஜஸ்பிரீட் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் அனைத்துப் போட்டிகளிலும் அசத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதல் 10 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இருப்பதால் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையான வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி ரன்களை குவிக்க அதிரடி ஆட்டத்தை கையாள வேண்டும்.

#2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டுகளை இழக்கக்கூடாது

Kuldeep - Chahal
Kuldeep - Chahal

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் வல்லவர்கள். எதிரணிக்கு மிடில் ஓவர்களில் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது இவர்களே, குறிப்பாக குல்தீப் மற்றும் சஹால் இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியேயும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சென்ற முறை இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் குல்தீப் மற்றும் சஹால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை சேர்க்க விடாமல் அவர்களது விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றி வந்தனர்.

சுழல் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் பந்து வீசுவதால் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த நேரத்தில் விளையாட வேண்டியது அவசியம், இவர்களிடம் விக்கெட் இழப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இந்திய அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிடும்.

#1 துவக்க வீரர்களுக்கு அதிகமான பவுண்டரிகள் வழங்குவதை தவிர்க்கவும்

Rohit - Dhawan
Rohit - Dhawan

இந்திய அணியின் பேட்டிங் வரிசையானது ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரை பொறுத்தே அமையும் என அனைவரும் அறிந்ததே. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் தவான் முதல் 10 ஓவர்களில் அதிக பவுண்டரிகளை அடிக்கவே விரும்புவார்கள் ஆனால் கோலி ஓட்டங்களை எடுக்க விரும்புவார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் ரோகித் மற்றும் தவான் ஆகிய இரண்டு துவக்க வீரர்களுக்கும் அதிக பவுண்டரிகள் வழங்குவதை தவிர்த்தால் அவர்களது விக்கெட்டுகளை பறிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

துவக்க வீரர்களின் விக்கெட்டுகளை விரைவாகக் கைப்பற்றுவதன் மூலம் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எளிதாக கைப்பற்றலாம். இருப்பினும், முதல் 10 ஓவர்களில் அணியில் டாப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது கடினமே.