ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்

கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்
கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்

#2. பேட்டிங்கில் நல்ல தொடக்கம்

கே எல் ராகுல்
கே எல் ராகுல்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா தோற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நல்ல தொடக்கம் அமையாததே. ஆம், அந்த தொடரில் தொடக்க பேட்ஸ்மேன்களை மாற்றிக் கொண்டே இருந்தார் அணியின் கேப்டன் கோலி.

நல்ல தொடக்கம் அமைந்தால், பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள் அதே உத்வேகத்தோடு ரன் சேகரிப்பில் ஈடுபடுவர். கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் ஃபார்முலாவாக இது திகழ்கிறது. இதன் காரணமாகவே பல அணிகள் இந்தியாவை எதிர்கொள்ளும்போது தொடக்க ஆட்டக்காரர்களை அவுட் ஆக்குவதில் குறியாக இருப்பர்.

இந்தத் தொடரில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக வீரர் முரளி விஜய், கே.எல்.ராகுல் மற்றும் இளம் வீரர் ப்ரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரர்களாக அணியில் உள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் முரளி விஜய்க்கு மட்டுமே உண்டு.

முரளி விஜய்க்கு இங்கிலாந்து தொடர் சரியாக அமையவில்லை. முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளான “கவுண்டி”-யில் பங்குபெற்று நன்றாக ஆடி தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தார்.

அதேபோல் கே.எல். ராகுல் இங்கிலாந்து தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை. கடைசி போட்டியில் சதம் அடித்திருந்தாலும் சற்று மந்தமாகவே காணப்பட்டார். எனவே இந்தத் தொடர் அவருக்கு வாழ்வா சாவா தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததன் மூலம் தன்னை இந்த கிரிக்கெட் உலகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்ட இளம் வீரர் ப்ரித்வி ஷா அணியில் இருப்பது கூடுதல் பலம். இவர் ஆடும் XI-ல் இடம் பெறுவது சந்தேகம்தான். எனினும் விஜய் மற்றும் ராகுல் சொதப்பினால் அணியில் இவரை நிச்சயமாக தேர்வு செய்வார் கேப்டன் கோலி.

Quick Links