ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்

கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்
கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்

#.1 மிடில் ஆர்டரின் நிலைத்தன்மை

ரஹானே இங்கிலாந்து தொடரில்
ரஹானே இங்கிலாந்து தொடரில்

இந்தியாவின் மிடில் ஆர்டர் தொடக்க ஆட்டக்காரர்களை நம்பியே உள்ளது. அவர்கள் சொதப்பினால் இவர்களும் சொதப்புவது வழக்கம்.

கடந்த சில வருடங்களாக இந்தியாவின் மிடில் ஆர்டர் தேர்வுக்குழுவினருக்கு தலைவலியாக இருந்து வந்துள்ளது. காரணம் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் இருத்தல். அதேபோல் கேப்டன் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல் அணியை மாற்றிக்கொண்டே இருத்தல் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கிலாந்து தொடரில் கோலி மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். இங்கிலாந்து பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். அதே நோக்கத்தில் இந்த தொடரிலும் கோலி ஆடினாலும் அவருக்கு துணை நிற்க ஏற்ற பேட்ஸ்மேன் அமைய வேண்டும். கடைசி டி20 போட்டியில் தனது அரைசதத்தின் மூலம் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் கோலி. அதே டச்சுடன் டெஸ்ட் தொடரிலும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜின்க்யா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி அணியில் இடம் பெற்றுள்ளனர். ரஹானே இங்கிலாந்து தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தாலும், இந்த தொடரில் தனது முழு ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஹாரி தனது முதல் போட்டியில் அதுவும் இந்திய அணி விக்கெட்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த நிலையில் அரை சதம் அடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், இந்தியாவின் லிமிடெட் ஓவர்ஸ் ஹீரோவான ரோஹித் ஷர்மாவும் அணியில் இடம்பெற்றுள்ளார். தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் சொதப்பியிருந்த ரோஹித், வாய்ப்பு கிடைத்தால் இந்த தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளிலும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கான்செப்ட் : அவிக் தாஸ்

எழுத்து &மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்

Quick Links