பொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் போட்டியில் கேட்ச் மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்பர். ஓரிரு கேட்சுகளை தவறவிட்டாலும் போட்டியை தவற விடுவது போன்றதாகும். இவற்றின் காரணமாகவே அனைத்து அணிகளும் பீல்டிங் பயிற்சியாளரை நியமித்துள்ளது.
1990களிலிருந்து கிரிக்கெட் போட்டியை காணும் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக நினைவு இருக்கும், ஸ்டீவ் வாக் கிப்ஸ் இடம் எளிதான கேட்சை தவறவிட்ட உடன் இதைக் கூறினார் "நீங்கள் உலகக்கோப்பையை தவறவிட்டீர்கள்".
இருப்பினும் உலககோப்பை முடிந்து சில நாட்களில் ஸ்டீவ் வாக், நான் அப்படி எதுவும் சொல்லவில்லை இது தவறான செய்தி என்று கூறினார், ஆனாலும் இன்றைய போட்டிகளிலும் இவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதே போல் சில முறை சில வீரர்களால் அவர்களது அணிக்கு இவ்வாறு நிகழ்ந்துள்ளன. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இவற்றில் காணலாம்.
1.கிப்ஸ்
உலகக் கோப்பை 1999 - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - சூப்பர் சிக்ஸ் போட்டி - பிர்மிங்காம்)
அன்றைய தினத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு நாயகனாக இருந்திருப்பார் கிப்ஸ், ஆனால் அந்த கேட்சை தவறவிட்டதன் மூலம் இவர் முதல் இன்னிங்சில் 101* ரன்களை குவித்தும் ஆஸ்திரேலியாவின் நாயகனாக மாறினார். ஆஸ்திரேலியா இன்னிங்சில் 31 வது ஓவரில் ஸ்டீவ் வாக் 56 ரன்கள் குவித்த நிலையில் இவரது கேட்சை தவறிவிட்டார் கிப்ஸ்.
இதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை நொறுக்கிய ஸ்டீவ் வாக் 115 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். கிப்ஸ் எளிதான கேட்சை தன்வசப்படுத்தி இருந்தால் ஸ்டீவ் வாக்கின் ஆட்டத்தைப் பற்றிய பேச்சு இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
அன்றைய ஆட்டத்தில் கிப்ஸ் கேட்ச்சை பிடித்ததும் அவர் உணர்ச்சி வசத்தில் பந்தை வானத்தை நோக்கி எரிந்தார் அப்பொழுது அவரின் கைகளில் இருந்து பந்து தப்பின.
2. டுமினி மற்றும் பெபெஹர்டியன்
( உலகக் கோப்பை 2015 - அரையிறுதி 1 - ஆக்லாந்து - ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா)
நீங்கள் உலகக் கோப்பையை பற்றி சோகமான கட்டுரைகளைப் படித்தால் அவற்றில் மீண்டும் மீண்டும் இடம் பெறக்கூடிய ஒரே அணி தென் ஆப்பிரிக்கா. கிப்ஸ் உணர்ச்சிவசத்தால் தவறவிட்டார் என்றால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பெஹர்டியன் விரக்தியில் தவறிவிட்டார் என்று நன்றாக தெரிகின்றது.
எலியாட் 75 ரன்களில் களத்தில் இருந்த பொழுது பெஹர்டியனிற்க்கு கேட்ச் வாய்ப்பு ஏற்பட்டது, இவற்றை எளிதாக பிடிக்கும் தருணத்தில் டுமினி ஃபைன் லெக் திசையிலிருந்து ஓடி வந்தார், இருவரும் தனக்கான கேட்ச் என்று கூறாமல் இருவரும் மோதி கீழே விழுந்தனர், இதன் மூலம் கேட்ச் வாய்ப்பு பறிபோனது. வாய்ப்பு பெற்ற எலியாட் நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
அந்த கேட்சை பிடித்திருந்தால், நியூசிலாந்து அணி 284/7 எனவும் கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவை என்ற வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்திருக்கலாம். அணியின் சிறந்த வேக பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் கடைசி ஓவர் வீசுவதால் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் உலகக் கோப்பை இறுதி போட்டியை அடைந்திருக்கலாம்.