3. நுவான் குகுலசேகரா
(உலகக் கோப்பை 2011 - இறுதிப் போட்டி - இந்தியா vs இலங்கை - மும்பை)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் கெளதம் கம்பீர் அதிக ரன்களை விளாசினர். இவர் 122 பந்துகளில் 97 ரன்களை குவித்தார், 30 ரன்களில் இருக்கும் பொழுது நுவான் குலசேகராவிடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார் இருப்பினும் அதை தவறவிட்டா் குலசேகரா.
கெளதம் கம்பீர் பவுண்டரி அடிக்க முயன்ற பொழுது பந்து நுவான் குலசேகராவின் இடத்திற்கு மிக அருகில் சென்றன, கேட்சையைப் பிடிக்க தனது இடத்திலிருந்து சற்று முன்னால் ஓடி வந்த குலசேகரா பந்தை பிடிக்க கீழே விழுந்தும் கேட்சை தவறவிட்டா்.
இதன் பின்பு கம்பீர் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் 250 ரங்களுக்கு மேல் இலக்கை அடைந்து வெற்றி முதல் அணி என்ற பெருமையை பெற்றது. குலசேகரா அந்த கேட்சை பிடித்திருந்தால் இந்திய அணி 68/3 இந்த நிலையில் இருந்திருக்கும், அதுமட்டுமின்றி சச்சின்,சேவாக் மற்றும் கம்பீர் ஆகிய மூவரும் வெளியேறி இருப்பார்கள், இதன் மூலம் இறுதிப் போட்டியை இலங்கை அணி வென்று இருக்கலாம்.
70 ரன்களுக்குள் இந்தியா அணியின் மூன்று முன்னணி பேட்ஸ்மென்கள் வெளியேறி இருந்தால் அது இந்தியா அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவே அமைந்திருக்கும் என்பது உறுதி. குலசேகரா கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட கெளதம் கம்பீர், விராட் கோலியுடன் கைகோர்த்து வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார்.