கிரிக்கெட் விளையாட்டிற்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இருப்பினும், ரசிகர்களின் பட்டாளத்தை மேலும் அதிகரிக்க ஐசிசி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த காலங்களில் கைவிட்ட மூன்று தொடர்களை பரிசீலனை செய்து மீண்டும் ஐசிசி நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன். அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் கிரிக்கெட், இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டிற்கென சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடுகள் குறைவே. கால்பந்துக்கான உலக கோப்பையில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்றன.
ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க, ஐசிசி உலக கிரிக்கெட் லீக் போட்டிகளை பல்வேறு நாடுகளில் நடத்தியுள்ளது. 93 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. சிறப்பாக விளையாடும் அணி ஐசிசி-ஆல் அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றது. ஆப்கானிஸ்தான் அணி இதற்கான சிறந்த உதாரணமாகும். ஐசிசி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தொடங்கியுள்ளது. மீண்டும் பரிசீலனை செய்து, ஐசிசி நடத்தவிருக்கும் மூன்று தொடர்களை குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#1.ஐசிசி சூப்பர் சீரியஸ்:
1992 முதல் 2005ம் ஆண்டு வரை சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியா அணி இழந்தது இல்லை. 1999 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி, எவரும் வீழ்த்த முடியாத அணியாக பார்க்கப்பட்டது. இதனால் ஐசிசி சூப்பர் சீரியஸ் என்னும் தொடரை உருவாக்கியது. இத்தொடரில் மற்ற அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் ஒரு அணியாக(வேர்ல்ட் 11) சேர்ந்து, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட வேண்டும். இதனை ஐசிசி நிர்வாகிகளும் ரசிகர்களும் பெரிதும் வரவேற்றனர். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தொடரை தொடங்கினர். மேலும், இத்தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புள்ளி பட்டியல் முதலிடம் வகிக்கும் அணியுடன், வேர்ல்ட் 11 எதிர்த்து விளையாட வேண்டும் என ஐசிசி அறிவித்தது.
இத்தொடரில் நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது. ரசிகர்களின் கூட்டம் குறைந்ததாலும், இத்தொடர் ஒருதலைப்பட்சமாக அமைந்தாலும், ஐசிசி இத்தொடரை கைவிட்டது.
#2. ஆப்ரோ-ஆசிய கோப்பை:
இந்த தொடரில் ஆசியாவை சேர்ந்த சிறந்த 11 வீரர்கள் ஒரு அணியாகவும் (ஆசிய 11) ஆபிரிக்காவை சேர்ந்த சிறந்த 11 வீரர்கள் ஒரு அணியாகவும் (ஆப்பிரிக்கா 11) இருப்பர். இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றிற்கு நிதி திரட்டவே போட்டிகள் நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்காசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவும் இத்தொடர் உதவியது.
இத்தொடர் முதலில் 2005 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று மற்றொரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, ஆதலால் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. 2007ஆம் ஆண்டு நடந்த தொடரில் ஆசிய 11 அணி, 3-0 என்ன தொடரை வென்றது. இத்தொடரில் 1892 ரன்கள் அடிக்கப்பட்டது .இதுவே 2017ஆம் ஆண்டு வரை , 3 போட்டிகள் கொண்ட தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.
ஒளிபரப்பாளர்கள் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மூன்றாவது தொடர் கைவிடப்பட்டது. இத்தொடரை அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் நடத்த ஐசிசி முயன்று வருகிறது.