#3. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிகள்:
2007-இல் நடந்த உலக கோப்பை டி20 போட்டிகள் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளூர் டி20 தொடர்களை நடத்த தொடங்கின. தொடரின் மொத்த பரிசுத் தொகை 6 மில்லியன் அமெரிக்க டாலர்கலாகும். தொடரில் வெற்றி பெறும் அணி 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெறும். இதனால் லீக் போட்டிகளை நடத்தும் அமைப்பாளர்கள் பெறும் லாபம் அடைந்தனர். ஆனால், ரசிகர்களின் கூட்டம் குறையத் தொடங்கியதால் ஆறு ஆண்டுகளுக்குப் பின் இத்தொடர்கள் கைவிடப்பட்டன.ஐபிஎல் தொடர் மட்டும் சிறந்த முறையில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற தொடர்கள் இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பெரிதும் உதவியது. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதால் பொல்லார்டு, சுனில் நரேன், கிரிஸ் மோரிஸ், போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
சாமுவேல் பத்ரி, பொல்லார்ட், சுனில் நரேன் போன்ற வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தனர். இது போன்ற தொடர்கள், இளம்வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவிகரமாக இருக்கும். ரசிகர்களின் நீண்ட கால தாகத்தினை தீர்க்க்இந்த மூன்று தொடர்களை மீண்டும் நடத்த ஐசிசி பரீசீலித்து வருகின்றது.