முன்னாள் இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். தனது 18 வருட கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முண்ணனி காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அத்துடன் 2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல காரணமாக இருந்தவரும் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங் 300க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 8000க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக வெற்றியை தேடித் தருவதில் இவர் வல்லவர். தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளவர் யுவராஜ் சிங்.
2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தனது முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி தனது பழைய ஆட்டத்திறனை உலகிற்கு அறிவித்தார்.
இவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதை யாரலும் மறக்க இயலாது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 2011 உலகக் கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த நிகழ்வுகளை உலகில் உள்ள எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க இயலாது.
நாம் இங்கு வருங்காலத்தில் யுவராஜ் சிங்கின் வழியை பின் பற்றி இந்திய மிடில் ஆர்டரில் அசத்த வாய்ப்புள்ள 3 சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகத இளம் வீரர்களை பற்றி காண்போம்.
#3 அபிஷேக் சர்மா
19 வயதிற்குட்பட்ட 2018 உலகக் கோப்பை தொடரில் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த பிரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுக்கான இடங்களை பிடித்துக் கொண்டனர். ஆனால் இந்த அணியில் இடம்பெற்றிருந்த யாரும் அறிந்திராத வருங்காலத்தில் பெரிய இடற்பாட்டை எதிரணிக்கு அளிக்கும் திறமை உடையவர் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா.
இவர் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 40 ரன்களை குவித்தார். இந்த இன்னிங்ஸிற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனிடம் புகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார்.
2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மாவிற்கு அதிரடியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் டாம் மூடி மற்றும் விவிஎஸ் லக்ஷமன் ஆகியோரது அறிவுரை மற்றும் வழிநடத்துதலை நன்கு கற்றுக் கொண்டார். அத்துடன் ஒரு நீண்ட கிரிக்கெட் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளார்.
யுவராஜ் சிங்-கின் வழிதடம் மற்றும் ஆட்டத்திறனை அபிஷேக் சர்மா வருங்காலத்தில் பின்பற்றுவார். இதனை தொடரந்து பின்பற்றி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக யுவராஜ் சிங் போல் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அபிஷேக் சர்மா வலம் வர வாய்ப்புள்ளது.