#2 சூர்ய குமார் யாதவ்
சூர்ய குமார் யாதவ் மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் களமிறங்குவார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் மிடில் ஆர்டரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். உள்ளுர் கிரிக்கெட்டில் மும்பை அணியின் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.
இருப்பினும் தனது ஆரம்ப கால ஐபிஎல் தொடர் இவருக்கு சரியாக அமையவில்லை. கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியிலிருந்து தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கிய சூர்ய குமார் யாதவ் 2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2019 ஐபிஎல் தொடரில் 35.62 சராசரி மற்றும் 130.86 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 424 ரன்களை குவித்துள்ளார். 15 போட்டிகளில் 65 பவுண்டரிகளை விளாசியுள்ளார். பிளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இவர் அடித்த 71 ரன்களின் மூலம் 132 என்ற இலக்கை அடைந்து இறுதிப் போட்டிக்கு மும்பை அணியை அழைத்துச் சென்றார்.அத்துடன் தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தேடித் தந்துள்ளார்.
ஷார்ட் பிட்ச் பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு, அதில் உள்ள தவறுகளை களைந்து சிறப்பான ஆட்டத்தை இவ்வருட ஐபிஎல் தொடரில் வெளிபடுத்தியுள்ளார். இவரது ஆட்டத்திறன் எதிர்காலத்தில் சீராக வெளிபட்டால் கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார்.