#1 இசான் கிஷான்
இசான் கிஷான் ஒரு சிறப்பான இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆவார். 19 வயதிற்குட்பட்ட 2016 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், ஜார்கன்ட் மாநில உள்ளூர் கிரிக்கெட் கிரிக்கெட்டிலும் மிடில் ஆர்டரில் களமிறக்கப் பட்டார். யுவராஜ் சிங் போலவே, இஷான் கிசானும் தொடக்க ஆட்டக்காரர்களுக்குப் பின்னர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை முடித்து வைக்கும் திறமை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான மிடில் ஆர்டர் பேட்டிங்கை இஷான் கிசான் வெளிபடுத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேக ரன்குவிப்பை பலமுறை வெளிபடுத்தியுள்ளார். ஆனால் சீராக வெளிப்படவில்லை. இவ்வருட ஐபிஎல் தொடரில் 16.83 சராசரியுடன் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்திய-ஏ அணியின் வழக்கமான வீரரான இஷான் கிசான், தனது சீரான ஆட்டத்திறனை தேடி வருகிறார். இனிவரும் காலங்களில் இஷான் கிஷான் ஆட்டம் சீராக வெளிபட தொடங்கினால் கண்டிப்பாக 2019 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. கண்டிப்பாக 2019 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் அதிக இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது.
ஓய்வறையில் யுவராஜ் சிங்கிடம் பகிர்ந்து கொண்ட சில அனுபவ பேட்டிங் நுணுக்கங்கள் மூலம் இஷான் கிசான் இனிவரும் காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.