2019 ஐபிஎல் தொடர் மே 12-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியின் வெற்றியை தட்டிப் பறித்தது அனைவரும் அறிந்த ஒன்று. விருவிருப்பான அந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், லசித் மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மும்பை இந்தியன்ஸ் நான்காவது முறையாக தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில், இளம் வீரர்களின் ஆதிக்கம் பெரும்பாலாக இருந்தபோதிலும், சென்னை அணி தொடர்ந்து தங்களுடைய அனுபவத்தை நிரூபித்து வருகின்றனர் .மேலும், சென்னை அணியில் இளம் வீரர்கள் இல்லாத போதிலும் துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் பவுலர்கள் ஆகியோரின் தொடர்ச்சியான பங்களிப்பு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
கடைசி போட்டியில் 150 ரன்களே இலக்காக இருந்தபோதிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்த விஷயமாக அமைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படும் மூன்று வீரர்களைப் பற்றி காணலாம்.
#1. மனோஜ் திவாரி:
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதும் ரன்களை குவிக்கவில்லை. குறிப்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் ராயுடு போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் எந்த ஒரு முன்னேற்றங்களும் காணப்படவில்லை. தொடக்க போட்டிகளில் ஓரளவுக்கு விளையாடிய கேதர் ஜாதவும் காயம் காரணமாக விளையாடவில்லை. சொற்ப ரன்களில் கடைசி போட்டியில் அனைவரும் வெளியேரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லக்கூடிய பெரிய பொறுப்பு தோனியின் கையில் வந்தடைந்தது. சிறப்பான தொடக்கத்தை அமைந்தபோதிலும் எதிர்பாராதவிதமாக அவரும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறந்து விளங்கிய மனோஜ் திவாரியே சென்னை தேடிக்கொண்டிருந்த வீரராவார். பெங்கால் அணியின் கேப்டனாக விளங்கிய இவர், இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை திசை திருப்பக்கூடிய ஒரு நல்ல ஆட்டக்காரரும் ஆவார். அதுமட்டுமன்றி, தலைசிறந்த பீல்டர்களுள் ஒருவரான இவர், ஒரு நல்ல லெக் ஸ்பின்னரும் ஆவார். இவ்வளவு திறமை வாய்ந்த இவரை சென்னை அணி அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்து பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதே அனைவருடைய கருத்தாகும்.
#2. மோர்னே மோர்கல்:
எதிர்பாராத காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி, இந்த சீசனில் விளையாட இயலவில்லை. அத்தோடு டேவிட் வில்லியும் சில காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஷர்துல் தாஷுர் மற்றும் தீபக் சாகர் ஆகிய இருவரை மட்டுமே கொண்டு சென்னை அணி விளையாடும் நிலை ஏற்பட்டது.
சர்வதேச போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக அனுபவம் கொண்ட மோர்னே மோர்கல், இவ்விடத்தில் கைகொடுக்கக்கூடிய ஒரு முக்கியமான பவுலர்கள் ஒருவர். மேலும், அடுத்த ஐபிஎல் ஏலத்தின் போதாவது இவர் இடம் பெறுவாரா என்பதே அனைவருடைய கோரிக்கையாகும்.
#3.லுக்கே ராஞ்சி:
கடந்த ஆண்டு சென்னை அணி தொடரை கைப்பற்றுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு. இந்த பெருமை அம்பத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரையுமே சாரும். எதுவாக இருப்பினும், இந்த ஆண்டு டுபிளிசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை ஆரம்பம் முதல் கடைசி வரை அளித்தனர். ஆனால், தோனியை தவிர மற்ற போட்டியாளர்களின் பெரிதான பங்களிப்பு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
சர்வதேச 20-ஓவர் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற லுக்கே ராஞ்சியும் இந்த சீசனில் எடுக்கப்படவில்லை. நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த இவர், ஒரு அதிரடியான ஆட்டத்தினால் தன்னுடைய அணிக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய அற்புதமான பேட்ஸ்மேன் ஆவார்.பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடர்ந்து ரன்களை குவித்துள்ள இவர், அடுத்த ஆண்டு சென்னை அணியில் விளையாடினால் அது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.