50 ஓவர் உலகக் கோப்பை 4 வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் நடத்தப்படும் ஒரு தொடராகும். கிரிக்கெட் வீரர்கள் இத்தொடரில் நன்றாக ஆட்டத்திறனை வெளிபடுத்துவதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களாக வலம் வருவார்கள். இந்த கிரிக்கெட் தொடர் அதிகம் மதிப்பிடப்பட்டதாகவும், உலகில் உள்ள அனைத்து மக்களாலும் பார்க்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நன்றாக விளையாடுவதன் மூலம் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களிடம் பாராட்டைப் பெறுவார்கள்.
குறிப்பாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலோ அல்லது அரையிறுதி மற்றும் லீக் சுற்றில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறனையோ வெளிபடுத்தும் வீரர்கள் அதிகம் மதிப்பிடப்பட்டு போற்றப்படுவர். ஏனெனில் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களது இயல்பான மனநிலை ஆட்டத்திறனே அதற்கு காரணமாகும்.
2003 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் ரிக்கி பாண்டிங்-கின் சதம், 1983 உலகக் கோப்பை தொடரில் ஜீம்பாப்வேவிற்கு எதிரான தகுதிச் சுற்றில் கபில்தேவ் விளாசிய 175, 1992 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் வாஸிம் அக்ரமின் அற்புதமான பந்துவீச்சு திறன் ஆகியன இதற்கு சான்றுகளாக கூறப்படுகிறது. அத்துடன் இது உலகில் எந்த காலத்திலும் யாரலும் மறக்க முடியாத நினைவுகளாகும்.
உலகக் கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த வீரர்களை மட்டுமே உலகம் நியாபகம் வைத்திருக்கும். இன்னும் சில வீரர்கள் குறைவான பங்களிப்பை அணிக்கு அளித்திருந்தாலும், அந்த ரன்களின் மூலம் அவ்வணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அத்தகைய வீரர்களை ஒரு சில ரசிகர்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள்.
நாம் இங்கு உலகக் கோப்பை தொடரில் சிறந்த பங்களிப்பை அளித்தும், யாரும் அறிந்திராத 3 வீரர்களை பற்றி காண்போம்.
#1 ரோஜர் பின்னி - இந்திய வீரர்(1983)
1983 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு நனவானது. அக்காலங்கில் கிரிக்கெட் உலகை ஆண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை 1983 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வரலாற்று கோப்பையின் வெற்றிக்கு பின்னால் யாரும் அறிந்திராத ரோஜர் பின்னியின் பங்களிப்பும் உள்ளது. இவர் அந்தாண்டு உலக கோப்பை தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.
இவர் மொத்தமாக 8 போட்டிகளில் பங்கேற்று 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் பௌலிங்கில் சிறப்பான வீரராக செயல்பட்டு அக்காலங்களில் வலிமையான பேட்டிங் உடன் திகழ்ந்த அணிகளை குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை படைத்திருந்தார்.
வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 1983 உலகக் கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றார். இவரது மிகவும் சிறப்பான பௌலிங் திறன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக காலிறுதியில் வந்தது. அந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை 129 ரன்களுக்குள் சுருட்டினார் ரோஜர் பின்னி. அந்த வெற்றியில் இந்திய அணிக்காக தனது பெரும் பங்களிப்பை அளித்து இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றார் ரோஜர் பின்னி.