#2 ஆன்ரிவ் சைமன்ஸ் - ஆஸ்திரேலிய வீரர் (2003)
ஆன்ரிவ் சைமன்ஸின் பெரும்பாலன கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக முறை சர்சையில் சிக்கியிருப்பார். ஒவ்வொரு நாளும் புதுபுது சர்ச்சை நிகழ்வுகள் இவர் மீது எழுந்த வண்ணமாகவே இருக்கும். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஓடிஐ வீரர் ஆன்ரிவ் சைமன்ஸ் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். 1990ன் இறுதி மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆன்ரிவ் சைமன்ஸின் ஆட்டத்திறன் சீராக இல்லாமல் இருந்தது. மோசமன ரன் குவிப்பினால் ஆன்ரில் சைமன்ஸை அணியிலிருந்து நீக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இருப்பினும் 2003 உலகக் கோப்பை தொடரில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அணியில் சேர்த்ததது. இது அவருக்கு திருப்பு முனையாக அமைந்து அந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் 4வது இடத்தை பிடித்தார். 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிரான தனது முதல் போட்டியில் ஆன்ரிவ் சைமன்ஸ் 143 ரன்களை குவித்தார். இது அவரின் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. அத்துடன் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் லைன்-அப் வலிமையுடன் திகழ்ந்தது. 5 போட்டிகளில் பங்கேற்ற இவர் 326 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் சில இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்காக சில அதிரடி ஆட்டத்தை ஆன்ரிவ் சைமன்ஸ் வெளிபடுத்தியது குறிப்பிடத்தக்கது.