#3 சுரேஷ் ரெய்னா- இந்திய வீரர்(2011)
இந்திய கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவின் பங்கு என்ன என்பதைப்பற்றி கேட்பவர்களுக்கு இது தகுந்த பதிலாக இருக்கும் என நம்புகிறேன். 2011 கால கட்டத்தில் இந்திய அணியின் சிறந்த ஃபீலட்ர் மற்றும் ஆல்-ரவுண்டராக வலம் வந்த சுரேஷ் ரெய்னாவின் ஆட்டத்திறன் 2011 உலகக் கோப்பை தொடரில் மறைக்கப்பட்டுள்ளது. அணியின் தேவையை அறிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர் சுரேஷ் ரெய்னா.
இந்திய அணிக்காக முதல் முறையாக சுரேஷ் ரெய்னா களமிறங்கும் போது அவருடைய ஆட்டத்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு பேட்டிங்கில் தன்னை முழுமையாக நிறுபித்தார். இளம் வயதில் அனுபவ கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து நல்ல அனுபவத்தை அவர்களிடமிருந்து பெற்று கொண்டார்.
2011 உலகக் கோப்பை தொடரில் அகமாதபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 34* ரன்களை விளாசி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். யுவராஜ் சிங் உடன் இனைந்து ஒரு வலுவான் பார்ட்னர் ஷிப் அனைத்து ஆட்டத்தை முடித்து வைத்தார் சுரேஷ் ரெய்னா. பாகிஸ்தானிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டெத் ஓவர்களில் களமிறங்கி 36* ரன்களை சுரேஷ் ரெய்னா விளாசி இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார். இதுவே இறுதியாக மேட்ச்-வின்னிங் ரன்களாகும் அமைந்தது. தற்போது 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ரெய்னா அவ்வளவாக இடம்பெறவில்லை.