#2.ஸ்ரேயாஸ் அய்யர்:

24 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் பல்வேறு விதமான போட்டிகளில் விளையாடி நன்கு கை தேர்ந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இந்திய சீனியர் அணிக்காக 6 முறை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 42 என்ற பேட்டிங் சராசரியுடன் 210 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து இந்திய அணியில் தனது நிலையான இடத்தை பெற தள்ளாடி வருகிறார். மும்பையை சேர்ந்த இவர், கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர்களில் கூட டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வழிநடத்தி வரும் இவர், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றமடைய செய்துள்ளார் .நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் 463 ரன்களை குவித்து நம்பிக்கை அளித்துள்ளார். தற்போது, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று முதலாவது போட்டியில் 77 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
#1.ரிஷப் பண்ட்:

2019 உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் மூவரும் விரைவிலேயே விக்கெட்களை இழந்த போதிலும் ஓரளவுக்கு நின்று அணியை சற்று மீட்டெடுத்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தவறான சாட்டை தேர்வு செய்து ஆட்டமிழந்தார், இந்த ரிஷப் பண்.ட் போட்டி முடிந்த பின்னர் கேப்டன் விராத் கோலி அளித்த பேட்டியில், "பேண்ட் இன்னும் இளம் வீரர் தான். இவர் தவறுகளை திருத்திக் கொள்வார்" என்று கூறியுள்ளார். அணியிலிருந்த ஷிகர் தவான் காயத்தால் தொடரில் இருந்து விலகி நேரத்தில் 15 பேர் கொண்ட அணியில் இவர் இணைக்கப்பட்டார். 4 போட்டிகளில் களமிறக்கப்பட்டு 116 ரன்கள் குவித்துள்ளார். அனைவரும் எதிர்பார்த்தபடி இவர் விளையாடவில்லை என்றாலும் இன்னும் இவர் சாதிக்க பல உள்ளது. எனவே, அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் இனி வரும் தொடர்களில் இவர் தொடர்ந்து அணியில் இடம் பெற்று தனது இயல்பான ஆட்டத்தை எவ்வித சந்தேகமும் இன்றி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.