இந்திய கிரிக்கெட் அணி வருங்காலத்தில் ஒரு மேன்மேலும் சிறந்த அணியாக தொடர போகிறது. இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிகவும் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக தற்போது உள்ளது. நிறைய இளம் வீரர்கள் தங்களின் ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி தற்போது முதலே இந்திய அணியில் இடம்பெற்று வருகின்றனர்.
அனைத்து இளம் வீரர்களும் தனது நாட்டிற்காக விளையாடி தன்னை முழுவதுமாக நிறுபித்து கிரிக்கெட்டில் ஒரு பெரும் இடத்தை அடைய வேண்டும் என்பதே இலக்காக கொண்டுள்ளனர். சில கிரிக்கெட் வீரர்களுக்கு தனது இளம் வயதிலேயே தன்னை நிறுபித்து U-19 உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்று இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
கடந்த வருடம் U-19 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அணைத்து இந்திய வீரர்களின் பங்களிப்பினால் இந்திய அணி வென்றிருந்தாலும் சில நட்சத்திர வீரர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கும். அவர்களை அடையாளம் கண்டு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பளித்து அதில் தன்னை முழுமையாக நிருபிக்கும் இளம் வீரர்கள் இந்திய அணிக்கு தகுதிபெறுகின்றனர்.
வருங்காலத்தில் இந்திய அணியில் இடம்பெற்று அசத்தவிருக்கும் 3 இந்திய இளம் வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.
#1 பிரித்வி ஷா
பிரித்வி ஷா U-19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2018 U-19 உலகக் கோப்பையும் வென்றார். இவர் இந்திய அணியை உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக வழி நடத்தினார். உலகக்கோப்பை-யை வெல்ல வேண்டும் என்ற பசியுடன் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்திய அணி 2018 U-19 உலகக் கோப்பையை வென்று வெற்றிவாகை சூடியது.
பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமையுடையவர். அத்துடன் மிடில் ஆர்டரிலும் களமிறங்கி அசத்தும் திறமை உடையவராக விளங்குகிறார்.இவர் தனது ஐந்தாவது முதல் தர போட்டியிலேயே 65.25 சராசரியுடன் 261 ரன்களை குவித்தார்.
2018 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 153.12 என்ற ஸ்ட்ரைக் ரேட்-வுடன் 245 ரன்களை அடித்தார்.
பிரித்வி ஷா-வின் முதல் சர்வதேச போட்டி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். இவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மட்டும் 134 ரன்களை குவித்தார்.
ஒட்டுமொத்தமாக இவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக பார்க்கப்படுகிறார்.எந்த வகையான சூழ்நிலையிலும் சரியான ஆட்டத்திறனையும் சீராக வெளிபடுத்தும் திறமை உடையவராக பிரித்வி ஷா விளங்குகிறார்.
#2 சுப்மன் கில்
சுப்மன் கில் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் நம்பர்-3 முதல் நம்பர்-7 வரை விளையாடியதை U-19 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியிலும் பார்க்க முடிந்தது.
சுப்மன் கில் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திறனை கொண்டவராக விளங்குகிறார். U-19 உலகக் கோப்பை வென்றதில் பெரும் பங்களிப்பு சுப்மன் கில்-ற்கு உள்ளது. இவர் U-19 உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்று 124 சராசரியுடன் 372 ரன்களை குவித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
சுப்மன் கில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக 11 போட்டிகளில் களமிறங்கி 203 ரன்களை அடித்தார். பேட்டிங் வரிசையில் மிகவும் கீழ் வரிசையில் இறக்கப்பட்டதால் இவரால் அதிகமான பங்களிப்பை கொல்கத்தா அணிக்காக அளிக்கமுடியவில்லை.
தற்போது இவருக்கு 19 வயது தான் ஆகிறது. இப்போதே U-19 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ளார். இந்திய அணியில் இவரை கூடிய விரைவில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை புர்த்தி செய்து வருங்காலத்தில் சிறந்த வீரராக திழ்வார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
#3கம்லேஷ் நாகர்கோட்டி
கம்லேஷ் நாகர்கோட்டி ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். U-19 உலகக் கோப்பையில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். இவர் U19 உலகக் கோப்பையில் இந்திய பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இவர் 6 போட்டிகளில் கலந்து கொண்டு 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
U-19 உலகக் கோப்பையில் அசத்தியதால் இவருக்கு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இவர் அந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை. ஏனெனில் காயம் காரணமாக அவருக்கு அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல்-இல் அனைவரின் கவனமும் இவர்மேல் தான் இருந்தது. உலகின் சிறந்த பேட்ஸ்மேனகளை இவர் எவ்வாறு கையாளுவார் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வத்தில் இருந்தனர்.
கம்லேஷ் நாகர்கோட்டி வருங்காலத்தில் சிறப்பாகவும் சீராகவும் பந்துவீச்சை மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.