# 1 ஷாஹீன் ஷா அஃப்ரிடி
இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி கான் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்காக (கேஆர்எல்) விளையாடுகிறார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி கடந்த சர்வதேச உலகக்கோப்பை தொடரில் தனது சிறந்த பந்துவீச்சால் அதிகளவில் விக்கெட்களை வீழ்த்தி தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்காக ஷாஹீன் அறிமுகமானாலும், அவர் இன்னும் தனக்கு டெஸ்ட் இடத்தை உறுதிப்படுத்தவில்லை.
ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில், அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட்டில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆறு போட்டிகளில் பங்கேற்று 23.23 சராசரியை பெற்று 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷாஹீன் ஷா அஃப்ரிடி தனது முதல் எஃப்சி போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சிறப்பான பந்துவீச்சு திறைமையால் தலைப்புச் செய்தி ஆனார். இதுவரை 24 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடிய ஷாஹீன் ஷா அஃப்ரிடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி தனது பந்தவீச்சில் சிறப்பான நீலம் கொண்டு வீச்சுபவர்
அதுமட்டுமின்றி இவரின் ஸ்விங் பந்தை எவராலும் கையாள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் முக்கிய நட்சத்திர வீரரான முகமது அமீர் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியதால் தற்போது புதிய பந்து வீச்சாளர்களை சேர்க்கும் நிலையில் இளம் வீரரான ஷாஹீன் ஷா அப்ரிடி அணியில் இடம் பெறுவதற்கு அதிகளவில் வாய்ப்பு இருக்கிறதாக கருதப்படுகிறது.