இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் மூன்றாவது டி20 போட்டி: மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி.! முக்கிய மூன்று காரணங்கள்.!

Clean the series
Clean the series

கடைசி டி20 போட்டியின் விதியானது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட போட்டியாகவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அமைந்தது. ஏனெனில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று தொடரை ஏற்கனவே பெற்றிருந்தது.இந்திய அணியின் யோசனைப்படி டி20 தொடரில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்த விளைவின் காரணமாக சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் நிறைய டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். பென்ச்சில் இருந்த சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரு ஸ்பின்னர்களையும் இந்த போட்டியில் சேர்த்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹிட்மயர், சயில் ஹோப், பவர் ஃபிளேயில் (முதல் 6 ஓவர்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்களை சேர்த்தனர். இந்த 50+ பார்ட்னர் ஷிப் தான் கடந்த 15 போட்டிகளில் ஆசியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அடித்த அதிக பார்ட்னர்ஷிப் ஆகும். ஆனால் சாஹல் வீசிய முதல் பந்திலே இந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தெரிந்தார். பின்னர் வந்த டேரன் ஃபிராவோ , நிக்கோலஸ் பூரான் அதிரடியான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 181 ரன்களை குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பதிலடி தரும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது ஆனால் கேப்டன் ரோகித்தின் விக்கெட் 3 வது ஓவரிலேயே பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த கே.எல்.ராகுல் கேப்டனை போலவே பவர் ஃபிளே கடைசி ஓவரில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். தவான் மற்றும் ரிஷப் பன்ட் வசம் ஆட்டம் வந்தது. அவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா இலக்கினை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆனால் கடைசி ஓவரில் ரிசப்பன்ட் மற்றும் தவான் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர் .இறுதியில் 1 பந்திற்கு 1 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. மனிஷ் பாண்டே தடுமாறி அந்த ரன்களை அடித்தார். இந்திய அணி 3-0 என்று டி20 தொடரை வென்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இப்போட்டியில் தோற்றதிற்கான 3 காரணங்களை இங்கு காணலாம்.

#3. இந்திய அணியின் மூலதன வீரர்களான ரோகித்தின் விக்கெட்டை எடுக்கத்தெறிந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு தவானின் விக்கெட்டை எடுக்கத் தவறினர்.

ரோகித் சர்மா தற்பொழுது முழு ஆட்டத்திறனுடன் உள்ளார். முக்கியமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான 50 ஓவர், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடைசி டி20 போட்டி அவருக்கு சாதகமாக இல்லை. இந்தியா அதிக இலக்கினை சேஸ் செய்யும்போது ரோகித் சர்மாவின் விக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிகப்பெரிய விக்கெட்டாக இருக்கும்.

ரோகித் தனது நான்கு ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவின் பெரிய விக்கெட்டை வீழ்த்தி அற்புதமான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் மற்றொரு மூலதன வீரரான ஷிகர் தவானின் விக்கெட்டினை வீழ்த்தி தவறிவிட்டது. விளைவு, அவர் மிகப்பெரிய ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஓஸ்மான் தாமஸ் பந்துவீச்சு அவ்வளவாக நன்றாக இல்லாத காரணத்தால் இந்திய அணி 181 ரன்களை சேஸ் செய்தது. இந்த காரணங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3வது டி20 போட்டியில் தோற்றது.

#2.தவான்- பன்ட் பார்ட்னர் ஷிப்

Duo Partnership
Duo Partnership

மிகப்பெரிய ஆட்டத்திறனுடன் உள்ள கேப்டன் ரோகித் விக்கெட் பறிபோன பிறகு, தவான் மற்றும் பன்ட் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். தவான் மற்றும் பன்ட் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அணியின் பௌர்களின் பந்துவீச்சை கணித்து ஃபோர், சிக்சராக விளாசித் தள்ளினார்.தவான் அனைத்து ஆடுகளத்திலும் நான் சிறப்பாக விளையாடுவேன் என தம்மை நிறுபித்தார்.மறுமுனையில் பன்ட் சிறப்பான பேட்டிங்காள் 33 பந்துகளில் தனது அரை சதத்தை விளாசினார். இந்த இரு பார்ட்னர் ஷிப்பினால் 11ஆக இருந்த தேவையான ரன்ரேட் 8 ஆக குறைத்தனர்.

இந்த பார்ட்னர் ஷிப் அதிரடியாக விளையாடி 130 ரன்களை சேர்த்தது. தவான் கடைசி ஓவரில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 10-12 வது ஒவரில் விளாசிய ரன்களால் ரன்கள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த பார்ட்னர்ஷிப்பின் விக்கெட் எடுக்காதது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

#1.மிடில் ஓவர்களில் சிறந்த பந்துவீச்சை வெளிபடுத்த தவறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி

Brathweight
Brathweight

மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றதிற்கு மிக முக்கியமான காரணம் சரியான பந்துவீச்சு இல்லாததே முக்கியமான காரணமாகும். சில அறிமுக வீரர்கள் இந்த அணிக்கு தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக வீசினாலும் இறுதிப்போட்டியில் மிக மோசமாகவே பந்துவீசினர். தாமஸ் ,கீமோ பால் போன்றோர் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் இறுதிப்போட்டியில் நன்றாக பந்துவீச தவறிவிட்டனர்.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மிடில் ஓவரில் பந்துவீச அணுபவ மற்றும் சிறப்பான பந்துவீச்சாளர் என யாரும் இல்லை. எனவே பன்ட் மற்றும் தவான் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை விளாசித்தள்ளினர். பியாரே மற்றும் பொல்லார்ட் போன்றோரும் ஒரு திட்டமில்லாமலேயே தங்களது பந்துவீச்சை மேற்கொண்டிருந்தனர். எனவே பௌலிங்கில் சிறிது கூட நெருக்கடி தராததால், தவான- பன்ட்டிற்கு ரன்களை விளாச ஏதுவாக இருந்தது. பேட்டிங்கிங் சிறப்பாக விளையாடியும் பௌலிங்கில் சொதப்பிய காரணத்தால் மேற்கிந்தியதீவுகள் அணி தோற்க மிக முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங் சிறப்பாக உள்ள போது பௌலிங்கில் சொதப்பியதும், பௌலிங் சிறப்பாக உள்ள போது பேட்டிங்கில் சொதப்பியதும் மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 தொடரை இழந்ததற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

எழுத்து : ப்ரோக்கன் கிரிக்கெட்

மொழியாக்கம் : சதீஸ்குமார்

Quick Links

App download animated image Get the free App now