ஐபிஎல் 2019: இந்த மூன்று வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம். 

Liam Dawson
Liam Dawson

ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த வருடமும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அளித்தன. சென்ற வருடத்தைப் போலவே இம்முறையும் முதல் பாதியில் நன்றாக செயல்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாவது பாதியில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை கோட்டை விட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை ஆனது கே எல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் போன்ற இரண்டு வீரர்களை நம்பியே இருக்கின்றன, பந்துவீச்சிலும் இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முஹமது ஷமியை நம்பியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு அணியாக செயல்படாமல் சில வீரர்களையும் மட்டுமே நம்பி உள்ளதால் பெரிதாக சோபிக்க முடிவதில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் அணியை மற்றும் வழி நடத்தும் விதம் மற்றும் சில முடிவுகள் தவறாகவேஅமைந்தது, குறிப்பாக கருன் நாயர்க்கு ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி 4 ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க தவறுகின்றனர். மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது இது மட்டுமின்றி பவர் பிளே ஓவர்களிலும் அதிகமான ரன்களை வழங்குகின்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் உள்ள இந்த பலவீனத்தை குறைக்க சில புதிய முகங்களை அணியில் சேர்க்க வேண்டும்.

பின்வரும் இந்த மூன்று வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தால் பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம்.

#3 லியாம் டாசன்

லியாம் டாசன் இங்கிலாந்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராவார். டி20 போட்டிகளில் பந்துவீச்சில் மூன்று முதல் நான்கு ஓவர் ஓவர்கள் வரை வீசும் இவர் பேட்டிங்கில் டாப் 6ல் பேட் செய்வதன் மூலம் இவர் எந்த ஒரு அணிக்கும் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒரு நாள் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது சராசரி 49 ஆகவும் ஸ்டிரைக் ரெட் 106 ஆகவும் உள்ளது. இதுமட்டுமின்றி இவரை 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் இவர் 128 போட்டியில் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ட்ரைக் ரேட் 21.7 ஆகவும் எக்கானமி 7.32 ஆகவும் உள்ளது, பேட்டிங்கில் 19.21 சராசரி கொண்ட இவரின் ஸ்டிரைக் ரேட் 115 ஆகும். இதுமட்டுமின்றி இவர் துபாயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல் பட்டு வருகின்றார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் போதுமான பந்துவீச்சாளர்கள் இல்லை, பார்ட் டைம் பவுலராக மந்தீப் சிங் மட்டுமே உள்ளார் ஆனால் அவரும் பெரிதாக சோபிக்க முடியாததால் 5வது அல்லது 6வது பந்துவீசசாளராக லியாம் டாசனை அணியில் சேர்ப்பதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மிடில் ஆர்டரில் பலம் அதிகரிப்பதுடன் பந்துவீச்சிலும் பெரிதாக உதவுவார் என்பதில் சந்தேகமில்லை.

#2 மோர்னே மோர்கல்

Morne Morkel
Morne Morkel

சில வருடங்களாக மோர்னே மோர்கல் எந்த ஒரு அணியிலும் ஏலத்தில் விலை போகாதது ரசிகர்களின் மத்தியில் வியப்பாகவே இருந்தது. உயரமாக இருக்கும் இவர் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் தனது பவுன்சரால் திணறடிக்க செய்யும் திறமை உடையவர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் இவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களான வில்ஜோன் மற்றும் டை அதிகமான ரன்களை வழங்குகின்றனர், மோர்னே மோர்கெலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சேர்ப்பதன் மூலம் இவரின் அனுபவம் பஞ்சாப் அணிக்கு நிச்சயம் கைகொடுக்க, இது மட்டுமின்றி மொகாலியின் பவுண்டரிகள் பெரிதாக இருப்பதால் இவரின் பெளன்சர்களை கையாள்வது கடினமே.

இவர் 172 டி20 போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவரது ஸ்ட்ரைக் ரேட் 20.3 ஆகும். எக்கானமி 7.55 ஆகும்.

#1 பென் மெக்டர்மாட்

Ben McDermott
Ben McDermott

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்டர்மாட் மிடில் ஆர்டரில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறங்க கூடியவர், அதிரடி பேட்ஸ்மேனான இவர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மிகவும் ஆபத்தான வீரராக திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஹோபார்ட் ஹேரிகேனஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 40 போட்டிகளில் 756 ரன்களை குவித்துள்ளார், இவரது சராசரி 32.23 மற்றும் ஸ்டிரைக் ரேட் 131.2 ஆகும். இவர் அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் சூழ்நிலைக்கேற்ப பொறுமையாக விளையாடும் வீரர் எனவும் நிரூபித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி 4 ஓவர்களில் சராசரியாக 10 ரன்களுக்கும் குறைவாகவே சேர்த்துள்ளனர். டேவிட் மில்லர் மற்றும் பூரன் பார்மின் காரணங்களால் சொதப்பி வருவதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மெக்டர்மாடை சேர்ப்பதன் மூலம் கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை சேர்க்க வாய்ப்புள்ளது.

தனது விக்கெட்டை எளிதாக விடாமல் முதல் பாதியில் பொறுமையாக விளையாடி இரண்டாவது பாதியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வேகமாக ரன் சேர்க்கும் வல்லமை உடையவர், தற்பொழுது பஞ்சாப் அணிக்கு இதுவே தேவையாகும்.

Quick Links

App download animated image Get the free App now