#2 மோர்னே மோர்கல்
சில வருடங்களாக மோர்னே மோர்கல் எந்த ஒரு அணியிலும் ஏலத்தில் விலை போகாதது ரசிகர்களின் மத்தியில் வியப்பாகவே இருந்தது. உயரமாக இருக்கும் இவர் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் தனது பவுன்சரால் திணறடிக்க செய்யும் திறமை உடையவர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் இவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களான வில்ஜோன் மற்றும் டை அதிகமான ரன்களை வழங்குகின்றனர், மோர்னே மோர்கெலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சேர்ப்பதன் மூலம் இவரின் அனுபவம் பஞ்சாப் அணிக்கு நிச்சயம் கைகொடுக்க, இது மட்டுமின்றி மொகாலியின் பவுண்டரிகள் பெரிதாக இருப்பதால் இவரின் பெளன்சர்களை கையாள்வது கடினமே.
இவர் 172 டி20 போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவரது ஸ்ட்ரைக் ரேட் 20.3 ஆகும். எக்கானமி 7.55 ஆகும்.
#1 பென் மெக்டர்மாட்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்டர்மாட் மிடில் ஆர்டரில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறங்க கூடியவர், அதிரடி பேட்ஸ்மேனான இவர் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மிகவும் ஆபத்தான வீரராக திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
ஹோபார்ட் ஹேரிகேனஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 40 போட்டிகளில் 756 ரன்களை குவித்துள்ளார், இவரது சராசரி 32.23 மற்றும் ஸ்டிரைக் ரேட் 131.2 ஆகும். இவர் அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் சூழ்நிலைக்கேற்ப பொறுமையாக விளையாடும் வீரர் எனவும் நிரூபித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி 4 ஓவர்களில் சராசரியாக 10 ரன்களுக்கும் குறைவாகவே சேர்த்துள்ளனர். டேவிட் மில்லர் மற்றும் பூரன் பார்மின் காரணங்களால் சொதப்பி வருவதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மெக்டர்மாடை சேர்ப்பதன் மூலம் கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை சேர்க்க வாய்ப்புள்ளது.
தனது விக்கெட்டை எளிதாக விடாமல் முதல் பாதியில் பொறுமையாக விளையாடி இரண்டாவது பாதியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வேகமாக ரன் சேர்க்கும் வல்லமை உடையவர், தற்பொழுது பஞ்சாப் அணிக்கு இதுவே தேவையாகும்.