இந்திய அணி நவம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது.
இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை டி20 தொடரில் எளிதாக வைட் வாஸ் செய்தது.ஆனால் ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சந்திப்பது இந்தியாவிற்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியின் தூண்கள் டேவிட் வார்னர், ஸ்டிவ் ஸ்மித் ஆகியோர் தற்சமயம் அணியில் இல்லை.இருந்தாலும் இந்தியாவாவை அச்சுறுத்தும் அளவிற்கு ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் உள்ளனர்.
ஐ.பி.எல் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிகளின் அனுபவத்தை வைத்து 4 நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய டி20 தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் காத்துள்ளனர்.
#1.ஆன்ட்ரிவ் டை
தற்பொழுதுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுள் முதல் வீரராக நமக்கு ஞாபகம் வருவது ஆன்ட்ரிவ் டை தான்.சர்வதேச போட்டிகளில் இவருடைய சாதனைகள் அவ்வளவாக இல்லை என்றாலும் கடந்த சில வருடங்களாகத் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளார்
தற்பொழுது ஆன்ட்ரிவ் டை சிறந்த டி20 வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சிறந்த வேகப்பந்து வீச்சினை மேற்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களை தினறடித்தார்.
ஆன்ட்ரிவ் டை இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனங்களையறிந்து அதற்கேற்றார் போல் பந்து வீச்சை மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிறைய ஆஸ்திரேலிய வேகப்பந்து மற்றும் ஸ்பின் ஆடுகளங்களில் இவர் சிறப்பாகப் பந்து வீசியுள்ளார். கண்டிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் இவர் ஒரு கவணிக்கப்பட கூடிய வீரராக இருப்பார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
#2.கிறிஸ் லின்
இந்தியாவிற்கெதிராக டி20யில் அதிக ரன்களை அடித்த ஒரே வீரர் கிறிஸ் லின் ஆவார்.ஐ.பி.எல் சீசனில் கல்கத்தா அணியில் விளையாடும்போது எதிரணியின் சிறந்த பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்துள்ளார். லின் சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக ஆட்டத்திறனை வெளிபடுத்தவில்லை.ஆனால் இவர் இந்தியாவிற்கெதிராக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
#3.மேக்ஸ் வெல்
மூன்றாவதாக இந்தப் பட்டியலில் உள்ளவர் மேக்ஸ்வெல்.கடந்த 3-4 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டி20 அணியில் மிகப்பெரிய அரணாகச் செயல்பட்டு வருகிறார்.
மேக்ஸ் வெல்லின் தற்போதைய ஆட்டத்திறன் சிறந்ததாக இல்லை.அதனால் இந்தியாவிற்கெதிரான போட்டிகளில் தன்னை நிறுபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.ஆஸ்த்ரெலிய ஆடுகளம் இவருக்கு மிகப்பெரிய ரன்களை விளாச நன்கு ஒத்துழைக்கும்.
மேக்ஸ் வெல் ஒரு சிறந்த ஐ.பி.எல் வீரர் ஆவார்.ஆனால் கடந்த சீசனில் அவரின் மோசமான ஆட்டத்தால் அவரை டெல்லி அணியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.எனவே இந்தியாவிற்கெதிரான போட்டியில் தன்னை நிறுபித்தால் மட்டுமே ஐ.பி.எல்லில் தொடர வாய்ப்புள்ளது. எனவே இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சவாலை அளிப்பாரெனத் தெரிகிறது
#4.ஆரோன் ஃபின்ஜ்
ஆரோன் ஃபின்ச் கடந்த சில மாதங்களாகத் தனது ஆட்டத்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார்.13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய டி20 அணியில் இவரைத் தற்சமயம் கேப்டனாக நியமித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இவர் இந்தியாவிற்கெதிரான டி20 தொடரில் கேப்டனாகத் தம்மை நிறுபிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.இவர் விராட் கோலி அணிக்கு மிகுந்த அச்சுறுத்தலாகச் செயல்படுவாரெனத் தெரிகிறது.இவரது ஓபனிங் விக்கெட் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக அமையும். இவருக்குச் செட் ஆகிவிட்டால் பெரிய ரன்களை அடிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறமாட்டார்.