ஒரே போட்டியில் 4 சதங்கள் விளாசப்பட்ட ஒருநாள் போட்டி எது தெரியுமா ??

India Vs Australia
India Vs Australia

ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது சற்று கடினமான ஒன்றாகும். அதுவும் குறிப்பாக ஒரு அணியின் வீரர் சிறப்பாக விளையாடி சதம் விளாசினால், அந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேன் சதம் விளாசுவது என்பது அந்த அணிக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது புரிகிறது. இவ்வாறு ஒரே போட்டியில் சிறப்பாக விளையாடி 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசி உள்ளனர். அந்த போட்டியை பற்றி இங்கு காண்போம்.

#1) இந்தியா Vs ஆஸ்திரேலியா ( 2013 ஆம் ஆண்டு )

2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் ஆறாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன் பின்பு ஷேன் வாட்சன் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 93 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து வெளுத்து வாங்கிய ஜார்ஜ் பெய்லி, 114 பந்துகளில் 156 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். வாட்சன் மற்றும் பெய்லி இவர்கள் இருவரின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 350 ரன்கள் குவித்தது.

Virat Kohli
Virat Kohli

351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 79 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு தவான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதிவரை சிறப்பாக விளையாடிய விராட் கோலி 115 ரன்களும், தவான் 100 ரன்களும் விளாசினார். இவர்கள் இருவரின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#2) பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா ( 1998 ஆம் ஆண்டு )

Australia Team
Australia Team

1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய பிறகு மூன்றாவது வீரராக களம் இறங்கிய இசாஸ் அகமது, அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அதன் பின்பு மிடில் ஆர்டரில் வந்து சிறப்பாக விளையாடிய முகமது யூசுப், 100 ரன்கள் விளாசினார். இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 315 ரன்கள் குவித்தது.

Ricky Ponting
Ricky Ponting

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடிய ஆடம் கில்கிறிஸ்ட், 103 ரன்கள் விளாசினார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ரிக்கி பாண்டிங், 124 ரன்கள் விளாசினார். ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் இவர்கள் இருவரது சிறப்பான சதத்தால் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் 2 சதமும், ஆஸ்திரேலிய அணி சார்பில் 2 சதமும் விளாசபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links

App download animated image Get the free App now