இந்திய அணி சமீபத்தில் முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றி வைட் வாஷ் செய்தது. முதல் டி20யில் இந்திய அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமான நவ்தீப் சைனி தான் வீசிய முதல் ஓவரிலேயே இரு விக்கெட்களை கைப்பற்றி அதிரடி தொடக்கத்தை அளித்தார்.
இரு அதிரடி இடதுகை பேட்ஸ்மேன்களான நிக்கலஸ் பூரான் மற்றும் ஷீம்ரன் ஹட்மயர் ஆகிய இருவரையும் நவ்தீப் சைனி ஒரே ஓவரில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் ஆட்டத்தின் 20 ஓவரை மெய்டன் ஓவராகவும் வீசினார்.
இந்த ஆபூர்வ சாதனையை மாற்ற வீரர்கள் எவரேனும் செய்துள்ளனரா என்று பார்த்தால், கண்டிப்பாக கடந்த காலங்களில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நாம் இங்கு சர்வதேச டி20யில் 20வது ஓவரை மெய்டனாக வீசிய 4 பௌலர்களைப் பற்றி காண்போம்.
#4 முகமது அமீர் vs ஆஸ்திரேலியா - 2010
முகமது அமீர் 2010ல் நடந்த சர்வதேச டி20யில் 20வது ஓவரை மெய்டனாக வீசினார். 2010ல் நடந்த டி20 உலகக்கோப்பையின் 6வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழு உத்வேகத்துடன் இப்போட்டியில் செயல்பட்டனர். பாகிஸ்தான் பௌலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தனர். அச்சமயத்தில் ஆஸ்திரேலியா அணி 200+ ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது அமீர் அந்த எண்ணத்தை மாற்றியமைத்தார். அமீர் 20வது ஓவரின் முதல் பந்தில் மேதீவ் ஹய்டனின் விக்கெட்டை வீழ்த்தினார். இரண்டாவது பந்தில் மிட்செல் ஜான்சனின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் அடுத்த இரு பந்திலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முயற்சித்த போது தொடர்ந்து இரு ரன் அவுட் செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 1 ரன் கூட குறிக்கவில்லை. ஷான் டைய்ட் 5வது பந்தை தடுத்து நிறுத்தினார். 6வது பந்தில் போல்ட் ஆனார்.
இந்த ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதுடன் மெய்டன் ஓவராகவும் அமைந்ததது. இந்த 5 விக்கெட்டில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகவும் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்ட ஆஸ்திரேலிய அணியை சிதைத்த முகமது அமீரின் பௌலிங் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது.
#3 ஜீதன் படேல் vs மேற்கிந்தியத் தீவுகள் 2008
2008ல் ஹாமில்டனில் நடந்த இரண்டாவது டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் ஜீதன் படேல் 20 ஓவரை மெய்டனாக வீசி, மிகவும் அபூர்வ சாதனையை படைத்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 என்ற மிகப்பெரிய இலக்கை குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் இந்த இலக்கை சேஸ் செய்ய வாய்ப்பில்லாதது போல் அச்சமயத்தில் இருந்தது. ஏனெனில் கடைசி 6 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. ஜீதன் படேல் அந்த போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்தார். அதன்பின் கடைசி ஓவரை பந்துவீச அழைக்கப்பட்டார். ஜீதன் படேல் வீசிய முதல் பந்தை தினேஷ் ரம்டின் சிக்ஸர் விளாச முற்பட்டபோது போல்ட் ஆனார்.
கீரன் பொல்லார்ட் 3வது விக்கெட் வீழ்த்தப்பட்டார். அதன்பின் வீசப்பட்ட 3 பந்தையும் சுலைமான் பென் தடுத்து நிறுத்தினார். இதனால் ஜீதன் படேல் வீசிய அந்த ஓவர் மெய்டனானது.
#2 ஜனக் பிரகாஷ் vs கத்தார் 2019
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் மற்றும் கத்தார் அணிகள் மோதின. இப்போட்டியில் சிங்கப்பூர் பௌலர் ஜனக் பிரகாஷ் 20வது ஓவரை மெய்டனாக வீசி 187 ரன்களை அடையவிடாமல் தடுத்தார்.
கத்தார் அணி வெற்றி பெற கடைசி 6 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது. ஜனக் பிரகாஷ் 20வது ஓவரை வீச வந்தார். பிரகாஷ் அந்த ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். ஒரேயொரு லெக் பைஸ் ரன் மட்டுமே அந்த ஓவரில் சென்றது. இது பௌலரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எனவே இப்போட்டியின் 20வது ஓவர் மெய்டனாகி சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது.
#1 நவ்தீப் சைனி vs மேற்கிந்தியத் தீவுகள் 2019
இந்தப் பட்டியலில் சமீபத்தில் இனைந்தவர் இந்திய டி20 அணியின் அறிமுக பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி. நவ்தீப் சைனி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20யில் அறிமுகமானார். அப்போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு தொடர்ச்சியான பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிமுக வீரர் நவ்தீப் சைனி 20வது ஓவரில் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். கீரன் பொல்லார்டிற்கு அப்போது பேட்டிங்கில் இருந்தார். சைனி தான் வீசிய முதல் இரு பந்தையும் வைட்-யார்க்கராக வீசினார். மூன்றாவது பந்தை ஃபுல் டாஸ் பந்தாக வீசினார் சைனி, கீரன் பொல்லார்ட் அந்த பந்தை பேட் கொண்டு விளாசியதில் கேட்ச் ஆனார்.
பொல்லார்ட் விக்கெட்டிற்குப் பின்னர் களமிறங்கிய ஒஸானே தாமஸால், சைனி வீசிய கடைசி 3 பந்ததுகளையும் எதிர்கொள்ள முடியாத காரணத்தால் அந்த ஓவர் மெய்டன் ஆனது.