4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி ஜுலை 14 ஆம் தேதி முடிகிறது.இந்தாண்டு மொத்தம் பத்து அணிகள் மோதுகின்றன. இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசீலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகள் மேதுகின்றன.
1992 உலகக் கோப்பைக்குப் பின் முதல் முறையாக ரவுண்ட்-ராபின் சுற்று மூலம் லீக் போட்டிகள் தற்போது நடைப்பெறுகிறது. ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். அதாவது மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் நடைபெறும்.
இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றில் திறமை இருந்தும் அணியில் இடம் பெறாத நான்கு வீரர்களைப் பற்றி காண்போம்.
#4. மத்தேயு ஹோகார்ட் ( Matthew Hoggard )
மத்தேயு ஹோகார்ட், ஒரு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். 2000-2008 ஆம் காலத்தில் இங்கிலாந்திற்கான முன்னணி பந்துவீச்சாளர்களில் மத்தேயு ஹோகார்ட் ஆவார். 2000 ஆம் ஆண்டில் பந்துவீச்சாளராக அவர் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் அவர் 67 போட்டிகளில் 248 விக்கெட்டுகளை வீழ்த்தி 3.26 சராசரியை பெற்றுள்ளார். இவர் 2004 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்களை அடித்தார். இதுவே இவர் பேட்டிஙில் அடித்த அதகபட்ச ரன்களாகும். இவர் ஜோகன்ஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 12 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஓடிஐ தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார்
இவர் மொத்தமாக 26 ஓடிஐ தொடரில் விளையாடி 32 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர் தனது கடைசி ஓடிஐ தொடரை இந்தியாவுக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு விளைமயாடியுள்ளார். இவர் சிறப்பாக விளையாட்டிக்கொண்டிருந்த நேரத்தில் 2008 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். 2010 முதல் 2013 வரை லீஸ்செஸ்டெர்ஷைர் அணிக்கு கேப்டனாக விளையாடினார். இந்த தொடர்க்கு பின் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இவ்வளவு சிறப்பாக விளையாடிய இவர் உலகக் கோப்பையில் இடம் பெறவில்லை