#3.சர் அலஸ்டெய்ர் குக் ( sir Alastair Cook )
சர் அலஸ்டெய்ர் குக் நீண்ட காலமாக இங்கிலாந்து அணியில் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இவர் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வீரர் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை வென்றவர் ஆவார். இவர் 161 டெஸ்ட் போட்டிகளில் 12,472 ரன்கள் எடுத்த சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணியினல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 அல்லது அதற்கு அதிக ரன்கள் எடுத்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அதுமட்டுமின்றி, இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 294 ரன்களை அடித்தும் மற்றும் 175 கேட்ச்களையும் பிடித்து அதிக சாதனைகளுக்கு சொந்தகாரராக இருக்கிறார். 2011 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அவரை ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்ந்தெடுத்தது.
இவர் 2006ம் ஆண்டு இங்கை அணிக்கு எதிரான விளையாடிய இரண்டு ஓடிஐ தொடரில் இவர் 82 ரன்களை அடித்துள்ளார். இவர் 2007ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இவர் மொத்தமாக 92 ஓடிஐ தொடரில் 3000திற்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 36.40 சராசரியை பெற்றுள்ளார். இவர் ஓடிஐ போட்டிகளில் அதிகபட்சமாக 137 ரன்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் ஓடிஐ போட்டிகளில் சிறப்பாக விளையாடதால் இவர் உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துவிட்டார்.