#2.ஜஸ்டின் லாங்கர் ( Justin Langer )
ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஆவார். இவர் ஒரு இடது கை சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரகளான லாங்கரும் ஹேடனும் 2000ம் ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி உள்ளனர். உள்நாட்டு தொடரில் லாங்கர் தனது சிறப்பான ஆட்டத்தால் இவருக்கு டெஸ்ட் மற்றும் ஓடிஐ தொடரில் விளையாட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் 2002 ஆம் அண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்த டெஸ்ட் போட்டியில் 250 ரன்களை அடித்துள்ளார். இதுவே இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான லாங்கர் 105 டெஸ்ட் போட்டிகளில் 7700 ரன்களை பெற்றார். அதுமட்டுமின்றி இவர் 8 ஓடிஐ போட்டிகளில் 160 மட்டும் பெற்றார். இவர் 1994 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நடந்த ஓடிஐ தொடரில் 36 ரன்கள் மட்டும் பெற்றுள்ளார்.இவர் 1997ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடருக்கு பின் இவர் அனைத்து கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் ஓடிஐ போட்டிகளில் சிறப்பாக விளையாடதால் இவர் உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துவிட்டார்.இதன் பிறகு இவர் ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சியாளரானார்.