#1.வி. வி. எஸ். லக்ஸ்மன் ( v.v.s laxman )
வி.வி.எஸ் லக்ஸ்மன் ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளருமாவார். இவர் நடுவரிசையில் விளையாடும் வலது கை பேட்ஸ்மன் ஆவார். இவர் 90s மற்றும் 2000s காலக்கட்டத்தில் இவர் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தார். இந்திய அணி நீண்ட காலம் சிறப்பாக விளையாடியதற்கு இவரும் காரணமாவார்.
இவர் இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் 8,781 ரன்களை அடித்துள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுள் ஒருவராக இவர் இடம்பெற்றுள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் 17 முறை சதம் மற்றும் 56 முறை அரைசதங்களையும் விளாசியுள்ளார். இவர் டெஸ்ட் தொடரில் 281 அடித்தார்.அதுவே இவரின் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.
இவர் விளையாடிய 86 ஓடிஐ தொடர்களில் மொத்தம் 2,338 ரன்களை அடித்துள்ளார். இவர் ஓடிஐ தொடரில் மொத்தம் 6 சதங்களையும் 10 அரைசதங்களையும் வாளாசியுள்ளார். ஓடிஐ தொடரில் பல சதங்கள் அடித்த சில கிரிக்கெட்டர்களில்அவரும் ஒருவராக இருக்கிறார். இவர் ஓடிஐ தொடரில் 131 ரன்களே அதிகபட்ச ரனாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பாக விளையாடிய லக்ஸ்மன் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது சிறிது வருத்ததை அளிக்கிறது. இவர் 2012 ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். லக்ஷ்மன் ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்கியுள்ளார்.