கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் களத்தில் காயமடைவது இயல்பே. பந்து தாக்குவதாலையோ அல்லது பிற காரணங்களினாலோ வீரர்கள் காயமடைகின்றனர். இதனால் பெரும்பாலான வீரர்கள் காயமடைந்ததை தொடர்ந்து களத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர். இருந்தாலும் ஒருசில வீரர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் தங்களது நாட்டுக்காக விளையாடி அசத்தியுள்ளனர். சமீபத்தில் கூட நடந்து முடிந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்யும் போது பந்து முகத்தில் பட்டு தாடை கிழிந்து ரத்தம் வடிந்தது. அப்போதைய நேரத்தில் அவர் வெளியேறிவிட்டால் அந்த அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிலாம் இதனை உணர்ந்த அவர் அந்த காயத்துடனே விளையாடி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த வகையில் காயத்தை பெரிதாக கருதாமல் காயத்துடனே விளையாடி அசத்திய டாப்-4 வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#4) அனில் கும்ளே
இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளரான அனில் கும்ப்ளேவை கண்டால் அந்த கால பேட்ஸ்மேன்கள் அனைவரும் நடுங்குவார்கள். தனது பந்துவீச்சின் மூலம் இவர் பல சாதனைகளையும் படைத்துள்ளார். 2002 ஆம்ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலைடு மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மேர்வி டிலான் வீசிய பவுன்சர் அணியில் கும்ப்ளேவின் தலையை தாக்கியது. இதனால் காயமான இவரது தலையிலிருந்து ரத்தம் அடுத்த 20 நிமிடங்களுக்கு நிக்காமல் வந்தது.
இதன் அடுத்தநாள் தலையில் கட்டுடன் வந்து களமிறங்கி பந்துவீசினார் கும்ப்ளே. அந்த காயத்துடன் தொடர்ந்து 14 ஓவர்கள் வீசிய இவர் அந்த அணியின் நட்சத்திர வீரரான பிரைன் லாராவின் விக்கெட்டினை வீழ்த்தினார். ஆனால் அந்த போட்டியானது ட்ரா-வாகவே முடிவடைந்தது. அந்த போட்டியானது முடிவடைந்ததன் பின் நாடு திரும்பினார் இவர். இதனால் அந்த தொடரின் மற்ற போட்டிகளில் இவரால் பங்கேற்க முடியவில்லை.
#3) ஸ்டுவர்ட் பிராட்
2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதன் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான பிராட் இந்தியாவின் வருண் ஆரோன் வீசிய பந்தில் முகத்தில் அடி வாங்கினார். இதனால் அவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அதன் பின்னும் விளையாடிய இவர் 21 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதுமட்டுமல்லாமல் அதே போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இங்கிலாந்து அணியானது அந்த போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அந்த போட்டில் பந்து தாக்கியதால் மூலம் அவருக்கு மன பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட இது குறித்து அவர் கூறுகையில் தற்போது வரை தான் எந்த போட்டியில் களமிறங்கினாலும் அந்த சம்பவம் தன் கண் முன்னே வந்து செல்வதாக தெரிவித்தார்.
#2) க்ரேம் ஸ்மித்
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான க்ரேம் ஸ்மித் 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ரசிகர்களின் மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். அந்த போட்டியில் உடைந்த கையுடன் விளையாடிய இவர் இன்றளவும் " கிரிக்கெட் உலகின் துணிச்சலான மனிதர்" எனவும் அழைக்கப்படுகிறார். அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 394 ரன்கள் குவித்தது.
அந்த போட்டில் களமிறங்கிய ஸ்மித் 30 ரன்னில் இருக்கும் போது ஜான்சன் வீசிய பந்தின் மூலம் கையில் பலத்த காயத்திற்கு உள்ளாகினர். இதனால் அதன் பின் விளையாட முடியாத இவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவே 11-வது வீரராக களமிறங்கி ஒற்றை கையுடன் விளையாடுவார். 17 பந்துகள் வரை தாக்குப்பிடித்து இவரின் விக்கெட்டினை இறுதியில் ஜான்சன் வீழ்த்தினார்.
அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தாலும் ரசிகர்களின் மனதை ஸ்மித் தான் வென்றார்.
#1) மார்ஷல்
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் மார்ஷல் தன் கையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் தனது அணிக்காக 11 வது வீரராக களமிறங்கி தன் அணியின் சக வீரரான கோம்ஸ் சதமடிக்க உதவியாக இருப்பார். அதுபோக அதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் அதே கையுடன் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்துவார். இவரின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி அந்த போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.