#2) க்ரேம் ஸ்மித்
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான க்ரேம் ஸ்மித் 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ரசிகர்களின் மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றார். அந்த போட்டியில் உடைந்த கையுடன் விளையாடிய இவர் இன்றளவும் " கிரிக்கெட் உலகின் துணிச்சலான மனிதர்" எனவும் அழைக்கப்படுகிறார். அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 394 ரன்கள் குவித்தது.
அந்த போட்டில் களமிறங்கிய ஸ்மித் 30 ரன்னில் இருக்கும் போது ஜான்சன் வீசிய பந்தின் மூலம் கையில் பலத்த காயத்திற்கு உள்ளாகினர். இதனால் அதன் பின் விளையாட முடியாத இவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவே 11-வது வீரராக களமிறங்கி ஒற்றை கையுடன் விளையாடுவார். 17 பந்துகள் வரை தாக்குப்பிடித்து இவரின் விக்கெட்டினை இறுதியில் ஜான்சன் வீழ்த்தினார்.
அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தாலும் ரசிகர்களின் மனதை ஸ்மித் தான் வென்றார்.
#1) மார்ஷல்
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் மார்ஷல் தன் கையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் தனது அணிக்காக 11 வது வீரராக களமிறங்கி தன் அணியின் சக வீரரான கோம்ஸ் சதமடிக்க உதவியாக இருப்பார். அதுபோக அதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் அதே கையுடன் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்துவார். இவரின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி அந்த போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.