2017 ஐசிசி சேம்பியன் டிராபியில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும், தலைமை பயிற்சியாளர் அணில் கும்ளேவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் கசிந்தன. ஆரம்பத்தில் இருவருமே இந்த தகவலை மறுத்தனர். இருப்பினும் சேம்பியன் டிராபி முடிவில் இந்த தகவல் உண்மையானது.
அணில் கும்ளே இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதைக் கண்டு இந்திய ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வள்ளுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜீலை 2017 அன்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, அணில் கும்ளேவிற்கு மாற்று பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி மீண்டும் வீர நடைபோட்டது.
ரவி சாஸ்திரியின் ஓப்பந்தகாலம் முடிவடைந்த நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளர் பதவிக்கான அறிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மற்ற துனை பயிற்சியாளர்கள் (பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங்) பதவிக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரி தானாக மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடுவார். நாம் இங்கு இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள 4 முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி காண்போம்.
#4 சைமன் கட்டிச்
முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சைமன் கட்டிச் கிட்டத்தட்ட இரு சகாப்தங்கள் வரை தன் நாட்டிற்காக விளையாடினார். இவரது சிறப்பான பேட்டிங் ஸ்டைல் மற்றும் நுணுக்கமான பேட்டிங் திறனால், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் ஷீவ்னரின் சந்தர்பால்-வுடன் ஒப்பிடப்பட்டார்.
2010-11 ஆஷஸ் தொடருக்குப் பின்னர் சைமன் கட்டிச்-சின் புகழ் தாழ்ந்து ஆஸ்திரேலிய மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனால் இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வந்தது. அடுத்த மூன்று வருடங்கள் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வந்தார். 2013-14 பிக்பேஸ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியினை வழிநடத்தி சேம்பியன் பட்டத்தை வென்றார். இத்துடன் தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொண்டார்.
அக்டோபர் 2015ல் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் காலிஸிற்கு துணை பயிற்சியாளராக சைமன் கட்டிச் நியமிக்கப்பட்டார். 4 வருடங்கள் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக இருந்த சைமன் கட்டிச் சமீபத்தில் அந்த அணியிலிருந்து பிரிந்தார். சைமன் கட்டிச் கரேபியன் பிரிமியர் லீக் தொடரில் "டிரிபாங்கோ நைட் ரெய்டரஸ்" அணியின் தலைமை பயிற்சியாளராக 2017ல் பதவியேற்றார். அதன் பின்னர் அந்த அணி இரு முறை சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாத தொடக்கத்தில் "தீ ஹன்ரேட்" தொடரில் மான்செஸ்டரை சேர்ந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலர் போட்டி போட்டு வருகின்றனர். இப்பந்தயத்தில் சைமன் கட்டிச் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வர சிறு வாய்ப்புள்ளதாக தென்படுகிறது.
#4 மஹேல்லா ஜெயவர்த்தனே
முன்னாள் இலங்கை கேப்டன் மஹேல்லா ஜெயவர்த்தனே ஒரு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். 20,000ற்கும் மேலான சர்வதேச ரன்களை குவித்துள்ள ஜெயவர்த்தனே கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். 2015 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை தோல்வியடைந்தையடுத்து தனது ஓய்வினை ஜெயவர்த்தனே அறிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான 2015 ஐக்கிய அரபு எமிரேட் சுற்றுப்பயணத்தில் அந்த அணியின் ஒரு பகுதியாகவும், இங்கிலாந்தின் பேட்டிங் ஆலோசகராக அவரது பயிற்சி வாழ்க்கை தொடங்கியது. 2017 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்-ற்கு பதிலாக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று ஐபிஎல் தொடரில் ஜெயவர்த்தனே வழிகாட்டுதலில் மும்பை இந்தியன்ஸ் 2 முறை கோப்பையை வென்றுள்ளது. இதைத்தவிர இரு வருடங்கள் வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் குலான டைட்டன்ஸ் அணியின் ஒரு பகுதியாகவும் ஜெயவர்த்தனே இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வாரியம் 2019 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் ஒரு பகுதியாக இருக்குமாறு ஜெயவர்த்தனேவிற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதனை அவர் நிராகரித்துவிட்டார். குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சியாளராக பல சாதனைகளை படைத்துள்ள ஜெயவர்த்தனே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட தகுதியானவர் ஆவார்.
#2 டாம் மூடி
முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான இவர் குறைந்த காலங்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றார். 2001ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்த இவர் தலைமை பயிற்சியாளர், வர்னனையாளர், கிரிக்கெட் இயக்குநர் என பல பதவி வகித்தார்.
2005ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்ட பயிற்சியாளர்களுள் டாம் மூடியும் ஒருவராவார். ஆனால் தனது சக நாட்டு வீரர் கிரேக் சேப்பல்-லினால் அந்த வாய்ப்பை இழந்தார் டாம் மூடி. இருப்பினும் கூடிய விரைவிலே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தார்.
மேலும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு 2007ல் தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடி, 2007-08 ஆண்டிற்கான KFC 20-20 பிக்பேஸ் இறுதிப் போட்டிக்கு அந்த அணியை அழைத்துச் சென்றார். அத்துடன் 2008 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஒரு பகுதியாகவும் டாம் மூடி செயல்பட்டார்.
2013ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டாம் மூடி தொடர்ந்து 7 சீசன்கள் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இதில் 5 முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. 2016ல் சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. சமீபத்தில் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
2017ல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்ட போது டாம் மூடி பதிவு செய்தார். ஆனால் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதால் அப்பொழுதும் டாம் மூடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது மீண்டும் பதிவு செய்துள்ள டாம் மூடி-க்கு இம்முறையாவது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
#1 கேரி கிறிஸ்டன்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியதிலிருந்து அனைவராலும் அதிகம் பேசப்பட்டு வரும் பெயர் கேரி கிறிஸ்டன். 2011 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மீண்டும் இந்திய அணி நிர்வாகத்துடன் இனைய வேண்டும் என இந்திய ரசிகர்கள் அதிகம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
புகழ்குறைந்த கிரேன் செப்பல் 2008ல் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கேரி கிறிஸ்டன் அந்தப் பதவியை ஏற்றார். 2008 முதல் 2011 வரை கேரி கிறிஸ்டினின் வழிகாட்டுதலின் படி இந்திய அணி பல உயரங்களை அடைந்து கோப்பைகளை கைப்பற்றியது. குறிப்பாக 2011 உலகக்கோப்பை தொடரை கேரி கிறிஸ்டன் வழிகாட்டுதலில் இந்தியா கைப்பற்றியது மிகப்பெரிய சாதனையாக இவரது பயிற்சியாளர் பதவியில் அமைந்தது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கேரி கிறிஸ்டன் ஜீன் 2011 முதல் தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தனது சொந்த நாட்டிற்காக இரு வருடங்கள் பயிற்சியாளராக செயல்பட்ட இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பிய காரணத்தால் அப்பதவியிலிருந்து விலகினார்.
தற்போது வரை கேரி கிறிஸ்டன் வெவ்வேறு டி20 அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ் என பெயர்மாற்றப்பட்டுள்ளது) அணிக்காக 2014 முதல் 2015 வரை செயல்பட்டார். மீண்டும் 2018 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக உயர்த்தப்பட்டார். 2017-18 பிக்பேஸ் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஒரு சீசன் மட்டும் செயல்பட்டார்.
சமீபத்தில் இந்திய பெண்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஒரு சரயான பயிற்சியாளரை பிசிசிஐ தேடியது. கேரி கிறிஸ்டின் பெயர் அப்பட்டியலில் இருந்தது. ஆனால் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் WV ராமன்-னுக்கு, கேரி கிறிஸ்டனை விட அதிக முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அந்தச் சமயத்தில் கேரி கிறிஸ்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தற்போது இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் கேரி கிறிஸ்டன் அந்த இடத்திற்கு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் கேரி கிறிஸ்டனிற்கு அதிக புகழ் இருப்பதால், விராட் கோலி கேரி கிறிஸ்டனிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவரை தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.