#2 டாம் மூடி
முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான இவர் குறைந்த காலங்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றார். 2001ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்த இவர் தலைமை பயிற்சியாளர், வர்னனையாளர், கிரிக்கெட் இயக்குநர் என பல பதவி வகித்தார்.
2005ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்ட பயிற்சியாளர்களுள் டாம் மூடியும் ஒருவராவார். ஆனால் தனது சக நாட்டு வீரர் கிரேக் சேப்பல்-லினால் அந்த வாய்ப்பை இழந்தார் டாம் மூடி. இருப்பினும் கூடிய விரைவிலே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தார்.
மேலும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு 2007ல் தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடி, 2007-08 ஆண்டிற்கான KFC 20-20 பிக்பேஸ் இறுதிப் போட்டிக்கு அந்த அணியை அழைத்துச் சென்றார். அத்துடன் 2008 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஒரு பகுதியாகவும் டாம் மூடி செயல்பட்டார்.
2013ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டாம் மூடி தொடர்ந்து 7 சீசன்கள் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இதில் 5 முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. 2016ல் சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. சமீபத்தில் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
2017ல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்ட போது டாம் மூடி பதிவு செய்தார். ஆனால் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதால் அப்பொழுதும் டாம் மூடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது மீண்டும் பதிவு செய்துள்ள டாம் மூடி-க்கு இம்முறையாவது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.