#1 கேரி கிறிஸ்டன்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியதிலிருந்து அனைவராலும் அதிகம் பேசப்பட்டு வரும் பெயர் கேரி கிறிஸ்டன். 2011 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மீண்டும் இந்திய அணி நிர்வாகத்துடன் இனைய வேண்டும் என இந்திய ரசிகர்கள் அதிகம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
புகழ்குறைந்த கிரேன் செப்பல் 2008ல் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கேரி கிறிஸ்டன் அந்தப் பதவியை ஏற்றார். 2008 முதல் 2011 வரை கேரி கிறிஸ்டினின் வழிகாட்டுதலின் படி இந்திய அணி பல உயரங்களை அடைந்து கோப்பைகளை கைப்பற்றியது. குறிப்பாக 2011 உலகக்கோப்பை தொடரை கேரி கிறிஸ்டன் வழிகாட்டுதலில் இந்தியா கைப்பற்றியது மிகப்பெரிய சாதனையாக இவரது பயிற்சியாளர் பதவியில் அமைந்தது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கேரி கிறிஸ்டன் ஜீன் 2011 முதல் தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தனது சொந்த நாட்டிற்காக இரு வருடங்கள் பயிற்சியாளராக செயல்பட்ட இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பிய காரணத்தால் அப்பதவியிலிருந்து விலகினார்.
தற்போது வரை கேரி கிறிஸ்டன் வெவ்வேறு டி20 அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ் என பெயர்மாற்றப்பட்டுள்ளது) அணிக்காக 2014 முதல் 2015 வரை செயல்பட்டார். மீண்டும் 2018 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக உயர்த்தப்பட்டார். 2017-18 பிக்பேஸ் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஒரு சீசன் மட்டும் செயல்பட்டார்.
சமீபத்தில் இந்திய பெண்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஒரு சரயான பயிற்சியாளரை பிசிசிஐ தேடியது. கேரி கிறிஸ்டின் பெயர் அப்பட்டியலில் இருந்தது. ஆனால் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் WV ராமன்-னுக்கு, கேரி கிறிஸ்டனை விட அதிக முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அந்தச் சமயத்தில் கேரி கிறிஸ்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தற்போது இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் கேரி கிறிஸ்டன் அந்த இடத்திற்கு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் கேரி கிறிஸ்டனிற்கு அதிக புகழ் இருப்பதால், விராட் கோலி கேரி கிறிஸ்டனிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவரை தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.