இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2019 உலகக் கோப்பையில் அனைவரின் விருப்ப அணியாகவும் இந்திய அணி திகழ்கிறது. இந்திய அணியில் இருந்த சிறு சிறு தவறுகளை களைய இந்த இரு வெளிநாட்டு தொடர்களும் மிகவும் உதவியாக இருந்தது. இந்த தொடர்களில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் மற்றும் நம்பர் -4 பேட்ஸ்மேன் ஆகியோரை அடையாளம் காணப்பட்டது. அத்துடன் அணியின் ஒற்றுமை இந்த இரு தொடர்களையும் வெல்ல முழு காரணமாக அமைந்தது.
அம்பாத்தி ராயுடு , தினேஷ் கார்த்திக் , கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது இடத்தை உலகக் கோப்பை அணியில் உறுதி செய்துள்ளனர். அத்துடன் அணியில் உள்ள அனைவருமே தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி உள்ளனர். இதனால் இந்திய தேர்வுக்குழுவிற்கு யாரை அணியில் எடுப்பது என பெரும் தலைவலியாக தற்போது உள்ளது.
இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன் தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கெதிரான 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் அணியில் உள்ள குறைகளை களைய ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வளிக்க இந்திய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடர் முடிந்த உடனே ஐபிஎல் தொடர் தொடங்குவதால் உலகக் கோப்பை வீரர்களுக்கு அதிக வேலைப்பளுவை குறைக்க இந்த முடிவை இந்திய தேர்வுக்குழு எடுத்துள்ளது.
நாம் இங்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் மூன்று ஓடிஐ அல்லது முழு தொடருக்குமே ஓய்வளிக்க வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்களை பற்றி காண்போம்.
#4.முகமது ஷமி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடருக்கு முன் முகமது ஷமி இந்திய டெஸ்ட அணியில் மட்டுமே இடம்பிடித்திருந்தார். முகமது ஷமி ஆஸ்திரெலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய ஒருநாள் அணியில் நீங்கா இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
முகமது ஷமி சமீபத்தில் முடிந்த நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இவர் காயம் காரணமாக இடையில் சிறிது நாட்கள் ஓய்விலிருந்து டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரில் ஒருநாள் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்களை வீசினார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓடிஐ தொடர் , நியூசிலாந்து ஓடிஐ தொடர் என தொடர்ந்து விளையாடிக் கொண்டு உள்ளார். எனவே இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. தேர்வுக்குழு இதனை கவணத்தில் கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3.புவனேஸ்வர் குமார்
புவனேஸ்வர் குமார் 2018 தொடக்கத்திலிருந்தே காயத்தினால் அவதிப்பட்டு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் . 2018 ஆசியக் கோப்பையில் மீண்டும் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். அத்துடன் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஓடிஐ , டி20 தொடர் முழுவதும் பங்கேற்று தனது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார். இவர் டெஸ்ட் அணியில் இடம்பெறமுடியவில்லை .
ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ஓடிஐ ,டி20 தொடர்களிலிருந்து ஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. அதனால் இந்திய பௌலிங்கை நிர்வகிக்கும் பொறுப்பு புவனேஸ்வர் குமாரிடம் வந்தது. அவரும் சிறப்பாக தனது ஆட்டத்தை இந்த இரு தொடர்களிலும் வெளிபடுத்தியுள்ளார். இவர் ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் .
அத்துடன் வலது கை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நிறைய ஓவர்கள் வீச வேண்டி இருக்கும் என்பதால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு இவருக்கு கண்டிப்பாக ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது. இந்திய தேர்வுக்குழு குழு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இதனை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓய்வில் உள்ள பூம்ரா அணிக்கு திரும்ப இருப்பதால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பௌலிங்கை அவர் பார்த்துக் கொள்வார்.
#2.குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் இந்திய அணியின் ஒரு முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் திகழ்கிறார் . " சைனா மேன் " என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக சுழற்பந்து வீச்சில் திகழ்கிறார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் தனது மாயாஜால பௌலிங்கால் திணறடிக்கும் திறமை பெற்றவராக குல்தீப் யாதவ் விளங்குகிறார் . உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக செயல்படுகிறார் குல்தீப் யாதவ்.
இனிவரும் காலங்களில் இவரது ஃபிட்னஸில் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தும் . இவர் இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியில் வழக்கமான பௌலராகவும் , டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது ஒரு சில போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் அதிக போட்டிகளில் குல்தீப் யாதவ் பங்கேற்றுள்ளார்.
ஜாஸ்பிரிட் பூம்ரா ஓய்விலிருந்து அணிக்கு திரும்ப உள்ளார். இந்திய அணியில் யுஜ்வேந்திர சகால் , ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா போன்றோர் இருப்பதால் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு 24 வயதான குல்தீப் யாதவ்விற்கு ஆஸ்திரேலிய தொடரிலிருந்து இந்திய தேர்வுக் குழு ஓய்வளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
#1.ரோகித் சர்மா
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவின் போது இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரோகித் சர்மா , தவான் , முகமது ஷமி ஆகியோரின் அதிக வேலைப்பளு மற்றும் ஓய்வு குறித்து பேசியிருந்தார். தவான் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ரோகித் சர்மா மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளையும் விளையாடி வருகிறார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துனைக் கேப்டன் ரோகித் சர்மாவின் பங்கு மிகப்பெரியது ஆகும். இவரின் சிறப்பான ஆட்டத்திறன் , அதிரடி தொடக்கம் மற்றும் ஃபிட்னஸ் இந்திய அணி வெற்றிகளை குவிக்க காரணமாக உள்ளது.
ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். அத்துடன் மும்பை அணியின் பெரும் தூணாக ரோகித் திகழ்கிறார். தேர்வாளர்கள் ரோகித் சர்மாவிற்கு ஆஸ்திரேலியா தொடரில் ஓய்வளிக்க அதிக வாய்ப்புள்ளது. இவரது சிறப்பான தொடக்கம் உலகக் கோப்பையில் கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவை. எனவே தேர்வுக்குழு இதனை கவணத்தில் கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஓய்வில் உள்ள விராட் கோலி மீண்டும் இந்திய அணியில் இணைவார். ஐபிஎல் தொடருக்கு முன் ரோகித் சர்மாவிற்கு கண்டிப்பாக ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.