#3.புவனேஸ்வர் குமார்
புவனேஸ்வர் குமார் 2018 தொடக்கத்திலிருந்தே காயத்தினால் அவதிப்பட்டு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் . 2018 ஆசியக் கோப்பையில் மீண்டும் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். அத்துடன் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஓடிஐ , டி20 தொடர் முழுவதும் பங்கேற்று தனது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார். இவர் டெஸ்ட் அணியில் இடம்பெறமுடியவில்லை .
ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ஓடிஐ ,டி20 தொடர்களிலிருந்து ஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. அதனால் இந்திய பௌலிங்கை நிர்வகிக்கும் பொறுப்பு புவனேஸ்வர் குமாரிடம் வந்தது. அவரும் சிறப்பாக தனது ஆட்டத்தை இந்த இரு தொடர்களிலும் வெளிபடுத்தியுள்ளார். இவர் ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் .
அத்துடன் வலது கை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நிறைய ஓவர்கள் வீச வேண்டி இருக்கும் என்பதால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு இவருக்கு கண்டிப்பாக ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது. இந்திய தேர்வுக்குழு குழு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இதனை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓய்வில் உள்ள பூம்ரா அணிக்கு திரும்ப இருப்பதால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பௌலிங்கை அவர் பார்த்துக் கொள்வார்.