#2.குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் இந்திய அணியின் ஒரு முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் திகழ்கிறார் . " சைனா மேன் " என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக சுழற்பந்து வீச்சில் திகழ்கிறார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் தனது மாயாஜால பௌலிங்கால் திணறடிக்கும் திறமை பெற்றவராக குல்தீப் யாதவ் விளங்குகிறார் . உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக செயல்படுகிறார் குல்தீப் யாதவ்.
இனிவரும் காலங்களில் இவரது ஃபிட்னஸில் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தும் . இவர் இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியில் வழக்கமான பௌலராகவும் , டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது ஒரு சில போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் அதிக போட்டிகளில் குல்தீப் யாதவ் பங்கேற்றுள்ளார்.
ஜாஸ்பிரிட் பூம்ரா ஓய்விலிருந்து அணிக்கு திரும்ப உள்ளார். இந்திய அணியில் யுஜ்வேந்திர சகால் , ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா போன்றோர் இருப்பதால் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு 24 வயதான குல்தீப் யாதவ்விற்கு ஆஸ்திரேலிய தொடரிலிருந்து இந்திய தேர்வுக் குழு ஓய்வளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .