ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 3 பேட்டிங் என்பது முக்கியமான ஒரு பேட்டிங் வரிசையாகும். இவர் தொடக்க வீரர்களின் பட்டியலிலேயே இடம்பெறுவார்.
நம்பர் -3 பேட்ஸ்மேன்கள் சிலசமயம் முன்னதாகவே களமிறங்குவர். தொடக்க ஆட்டக்காரர்கள் அருமையாக விளையாடினால் சற்று நேரம் கழித்து களமிறங்குவர். இந்த பேட்டிங் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சவாலாகவே அமையும். ஆட்டத்தின் தன்மையை பொறுத்தே நம்பர்-3 பேட்ஸ்மேன்களின் பேட்டிங் திறன் அமையும்.
நாம் இங்கு ஒருநாள் போட்டிகளில் தற்போது அசத்திவரும் டாப்-4 , நம்பர்-3 பேட்ஸ்மேன்களை பற்றி காண்போம்.
#4 பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நம்பர்-3 பேட்டிங் வரிசைக்கு ஒரு சிறந்த வீரரை தேடிக்கொண்டிருந்த போது அந்த அணிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக பாபர் அசாம் கிடைத்தார். பாபர் அசாம் ஒரு சீரான ஆட்டத்தை வெளிபடுத்தக் கூடிய நம்பர்-3 பேட்ஸ்மேன் . டி காக்-கிற்கு பிறகு அதிவேகமாக 5 ஓடிஐ சதங்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் இவர்.
36 ஓடிஐ போட்டிகளில் நம்பர்-3 பேட்ஸ்மேனாக பங்கேற்று 59.52 சராசரியுடனும், 4 அரை சதங்கள் மற்றும் 8 சதங்களுடன் 1726 ரன்களை குவித்துள்ளார்.
#3 ஜோ ரூட்
இங்கிலாந்தின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர்-3 ஆக களமிறங்கி அசத்தி வருபவர் ஜோ ரூட். ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகம் பங்கேற்றுள்ளார். இருந்தாலும் ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாகவும் , சீராகவும் தனது ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.
ஜோ ரூட் 57 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு நம்பர்-3 பேட்ஸ்மேனாக களமிறங்கி 61.11 சராசரியுடன் 2811 ரன்களை குவித்துள்ளார்.இவர் 9 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ளார்.
#2 கானே வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன் மார்டின் க்ரோவுக்கு பிறகு நியூசிலாந்து கண்டெடுத்த சிறந்த நம்பர்-3 பேட்ஸ்மேன் கானே வில்லியம்சன். இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் சிறந்த கேப்டனாகவும் உள்ளார். இவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆகிய இரண்டையும் சரியான விதத்தில் எதிர்கொள்ளும் திறமைக் கொண்டவராக தற்போதைய தலைமுறையில் திகழ்கிறார்.
கானே வில்லியம்சன் 99 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நம்பர்-3 பேட்ஸ்மேனாக பங்கேற்று 49.62 சராசரியுடனும், 32 அரை சதம் மற்றும் 9 சதங்களுடன் , 4565 ரன்களை குவித்துள்ளார்.
#1 விராட் கோலி
ரன் மெஷின் என்றழைக்கப்படும் கிங் கோலி உலகின் நம்பர்-1 ஓடிஐ பேட்ஸ்மேனாக திகழுகிறார். விராட் கோலி நம்பர்-3 பேட்ஸ்மேனாக 2011ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக களமிறங்கினார். இவர் நம்பர்-3 பேட்ஸ்மேனாக சீரான ஆட்டத்தை வெளிபடுத்தி அசத்தி வருகிறார். அத்துடன் கிரிக்கெட்டில் தனித்தன்மை கொண்டவராக தற்போது விராட் கோலி திகழ்கிறார். விராட் கோலி நம்பர்-3 பேட்ஸ்மேனாக 156 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 63.59 சராசரியுடனும் , 38 அரைசதம் மற்றும் 31 சதங்களுடன் , 8139 ரன்களை குவித்துள்ளார்.
எழுத்து : நிதிஷ்
மொழியாக்கம் :சதீஸ்குமார்