ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை புதிய சிறந்த வீரர்களை அடையாளம் காணவும் , சில சந்தோஷமான மற்றும் எதிர்பார திருப்பங்கள் என அனைந்து நிகழ்வுகளும் நடக்கும் தொடராகவும் , ஒரு இரவில் பெரிய கிரிக்கெட் வீரராக உருவெடுக்க உதவும் தொடராக விளங்குகிறது. அத்துடன் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக உருவெடுக்க உதவும் தொடராகவும் உலகக் கோப்பை தொடர் திகழ்கிறது.
நிறைய கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்துகின்றனர். இவர்களது பெயர்கள் வரலாற்று புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் சிறப்பான இன்னிங்ஸ்கள் ஆட்டத்தை மாற்றியமைக்கும் விதமாகவும் , சாதனையை முறியடிக்கும் விதமாகவும் உலகக் கோப்பை வரலாற்றில் இடம்பெறும்.
எதிர்வரும் 2019 உலகக் கோப்பை தொடரிலும் நிறைய கிரிக்கெட் ஜாம்பவான்களின் சிறப்பான இன்னிங்ஸை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2019 உலகக் கோப்பை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ளது.
நாம் இங்கு உலகக் கோப்பை வரலாற்றில் கிரிக்கெட் ஜாம்பவான்களின் சிறந்த 4 இன்னிங்ஸ்கள் பற்றி காண்போம்.
#கபில் தேவ் : 175 நாட் அவுட் vs ஜிம்பாப்வே , 1983 உலகக் கோப்பை
1983ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு சிறந்த உலகக் கோப்பை தொடராகும். அந்த ஆண்டு உலகக் கோப்பையில் பெரிய அணியை வீழ்த்தி சேம்பியனாக உருவெடுத்தது இந்திய அணி. உலகம் முழுவதும் இந்திய அணியின் கிரிக்கெட் ஆட்டத்திறனை புரிய வைத்த உலகக் கோப்பை தொடராகவும் இது அமைந்தது.
இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல அணியில் உள்ள அனைத்து வீரர்களின் முழு பங்களிப்பு இருந்தாலும் , இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர் கபில்தேவ்-வின் பங்கு அதிகமாகும். இந்த உலக கோப்பையில் மற்றொரு சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடியவர்கள் ஸ்டால்வார்ட் மற்றும் சுனில் கவாஸ்கர்.
1983 உலகக் கோப்பையில் லீக் போட்டிகளில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறும். தொடக்கத்தில் ஜிம்பாப்வேவின் சிறப்பான பந்துவீச்சால் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது இந்தியா. இந்நிலையில் கபில் தேவ் களமிறங்கினார்.
இவர் எந்த சிரமமும் இன்றி ஜிம்பாப்வே பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு ஆடுகளத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்தை பறக்க விட்டார். உலகம் முழுவதும் இந்திய அணியின் உலகக்கோப்பை கணவு கனவாகவே போகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் , கபில் தேவ் அந்த எண்ணத்தை மாற்றி எழுதினார். இவர் இந்த போட்டியில் 138 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 175 ரன்களை விளாசினார். இவரது இந்த சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 60 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது.
இந்த போட்டியை கண்ட யாராலும் அவர்களது கண்களை நம்ப முடியவில்லை. 6வது பேட்டிங் வரிசையில் இத்தகைய சிறப்பான பேட்டிங் இந்திய அணியின் ஆட்டத்தை முழுவதுமாக மாற்றியது.
ஜிம்பாப்வே அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்திய அணியில் இன்றளவும் மிகப்பெரிய பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த சிறப்பான ஆட்ட நம்பிக்கையோடு அடுத்த போட்டிகளை எதிர் கொண்ட இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.