உலக கோப்பை வரலாற்றில் சிறந்த 4 இன்னிங்ஸ்கள்

Hayden & ponting
Hayden & ponting

#கெவின் ஓ'பிரைன் : 113 vs இங்கிலாந்து , 2011 உலகக் கோப்பை

Kevin O'Brien
Kevin O'Brien

இங்கிலாந்து அணி எப்பொழுதுமே ஐசிசி நடத்தும் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. 2009 மற்றும் 2014 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல் 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி அயர்லாந்தை எதிர் கொண்ட ஒரு போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஒ'பிரைனின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 327 ரன்களை குவித்தது. அயர்லாந்து அணி இந்த இலக்கை எட்டமாட்டார்கள் என அனைவரும் நினைத்தனர். கெவின் ஒ'பிரைன் களமிறங்குவதற்கு முன் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்து தடுமாறியது. பின்னர் அதே நிலையுடன் 111 ரன்களுக்கு 5 வது விக்கெட்டையயும் இழந்தது அயர்லாந்து அணி.

கெவின் ஒ'பிரைன் தொடர் விக்கெட் சரிவை கண்டு கொள்ளமால் தனது அதிரடி ஆட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். நிதானமாகவும் அருமையாகவும் தனது ஆட்டத்திறனை உலகக் கோப்பையில் வெளிபடுத்த ஆரம்பித்தார் .உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதத்தை குவித்தார். இந்த சாதனை இன்றளவும் யாரலும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சரியாக விளையாடி 111-5 என இருந்த அயர்லாந்து அணியின் ரன்களை 327ற்கு உயர்த்தி சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

அயர்லாந்திற்கு உலகக் கிரிக்கெட்டில் அவ்வளவாக பெயர் இல்லையென்றாலும் இந்த ஆட்டம் அயர்லாந்தின் ஒரு அடையாளமாக திகழ்கிறது.

Quick Links