12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி ஜுலை 14 ஆம் தேதி முடிகிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற 10 நாடுகள் பங்கேற்று வருகின்றன.
இந்நிலையில் மூன்று வீரர்கள் - ரோஹித் ஷர்மா, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் ஓடிஐ இன்னிங்ஸில் தலா 16 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்கள். தற்போது வரை இவர்களின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரில் பவுண்டரி சிறதளவு அருகில் இருப்பதால் இந்த வருடம் முறியடிக்க வாய்ப்புகள் உண்டு. அணியின் தொடக்க வீரர்களால் மட்டும் இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்பதால் ஒரு ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்சர்களைத் தாக்கும் சாதனையை முறியடிக்கக்கூடிய நான்கு வீரர்களை பற்றி காண்போம்.
#4.மார்டின் குப்தில்
இந்த உலகக் கோப்பையில் இந்த சாதனையை முறியடிக்கக்கூடிய நான்கு பேட்ஸ்மன்களில் கிவி பேட்ஸ்மேன் மார்ட்டின் குப்திலும் ஒருவர். கடந்த உலகக் கோப்பை வரலாற்றில் மார்டின் குப்தில் தனி மனிதராக 237*ரன்களை அடித்துள்ளார். இதுவே கடந்த உலகக் கோப்பை தொடரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. நியூசிலாந்தின் அனைத்து தொடக்க வீரர்களுள், முதல் மூன்று அதிகபட்ச ரன்கள் (237 *, 189 *, 180 *) குப்தில் உள்ளார்.
கிவி பேட்ஸ்மன்களுள் இவர் 166 சிக்ஸர்களை அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் இரணடாவது இடத்தில் இருக்கிறார். 32 வயதான மார்டின் குப்தில் நியூசிலாந்து அணியின் அதிக ரன் அடித்த வீரராக திகழ்கிறார். 2015ம் உலகக்கோப்பையில் இவரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசீலாந்து அணி இரண்டாம் இடத்தை பெற்றது.
#3.கிரிஸ் கெயில்
'யுனிவர்ஸ் பாஸ்' என்று அழைக்கப்படும் கெயில் இந்த உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்துள்ளார். 39 வயதான கெயில் இந்த ஆண்டு கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இவரின் சிறந்த பேட்டிங் திறைமையால் சிக்ஸ்ர்களை மிக எளிதாக அடித்து நொருக்குவார். ஷாஹித் அப்ரிடிக்கு பிறகு ஓடிஐ தொடரில் 317 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவர் 2015 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாவே அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார் அதில் 16 சிக்ஸ்ர்களை விளாசியுள்ளார். இவர் மீண்டும் இந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
#2.ஜானி பேர்ஸ்டோ
ஓடிஐ தொடரில் இங்கிலாந்து அணியின் சிறந்த தொடக்க பேட்ஸ்மேனாக ஜானி பேர்ஸ்டோ திகழ்கிறார். இவர் 36 இன்னிங்ஸில் 1168 ரன்களை அடித்து 115க்கும் அதிக ஸ்டிரைக் ரேட் பெற்றுள்ளார். இவர் 2017ஆம் ஆண்டிலிருந்து தொடக்க வீரராக களமிறங்க ஆரம்பித்தார. இவர் தொடக்கம் முதலே சிக்ஸர்களை அடித்து அணிக்கு பலம் சேர்ப்பார். இந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஜானி பேர்ஸ்டோ 16 சிக்ஸர்களை அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்காலம்.
#1.ரோகித் சர்மா
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்தய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து 16 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
இவர் ஓடிஐ தொடரில் 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார் மற்றும் இவர் 264 ரன்களை அடித்து தனிமதன் அடித்த அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. 2015 உலகக்கோப்பை தொடர்க்கு பிறகு ரோகித் 130 சிக்ஸர்களை அடித்துள்ளார்.இவர் சமீபத்தில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த உலகக்கோப்பையில் ரோகித் சர்மா மீண்டும் தனது சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்