#2 கவாஜா - ஹேன்ஸ்கோம் இடையிலான பார்ட்னெர்ஷிப்
பின்ச் மற்றும் கவாஜா ஆகியோருக்கு இடையேயான துவக்க பார்ட்னெர்ஷிப் பின்வரும் பேட்ஸ்மென்க்கு சரியான வழி அமைத்தது. பின்ச் ஆட்டமிழந்தாலும், ஹேன்ஸ்கோம் கவாஜாவுடன் நல்ல புரிதலில் ஆடினார். 5வது ஒருநாள் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தனர்.
அவர்கள் சரியான நேரத்தில் பவுண்டரிகள் விளாசியும், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து இவர்களை தாக்கினர். ஆனால், அது அவர்களால் முடியவில்லை. காரணம், பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை நிலைத்திருக்க விடவில்லை.
இந்த ஜோடி நடுத்தர ஓவர்களில் நன்றாக ஆடி வந்தனர். உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலியா சிறிது சரிந்தது. ஆனால் ஹேன்ஸ்கோம் மற்றும் கவாஜா ஆகியோருக்கு இடையேயான பார்ட்னெர்ஷிப் டெல்லி மைதானத்தில் ஆஸ்திரேலியர்கள் ஆதிக்கம் செலுத்த போதுமானதாக இருந்தது.
#3 இந்தியாவிற்கு மோசமான துவக்கம்
இந்த தொடரில் இந்திய அணியில் மோசமான நிகழ்வாக பார்க்க வேண்டியவை, துவக்க வீரர்களில் பார்ட்னெர்ஷிப். மற்ற தொடர்களில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்தது. நான்காவது போட்டியில் இந்திய அணியின் துவக்க ஜோடி 193 ரன்கள் சேர்த்தது. அதை தவிர, மற்ற போட்டிகளில் சொற்ப ரன்கள் மட்டுமே இந்திய அணிக்கு எஞ்சியது.
முக்கியான போட்டியான 5வது மற்றும் இறுதி போட்டியில் தவான் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சேசிங்கிற்கு பெருத்த அடியாக அமைந்தது. குறிப்பாக கோஹ்லி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
#4 இந்திய நடுத்தர பேட்ஸ்மேன்களை சிதைத்த ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள்
முதல் மூன்று வீரர்களில் இருவர் சரியாக செயல்படவில்லை. ஆதலால், மீதமுள்ள நடுத்தர வீரர்களான பண்ட், ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் இவர்கள் கட்டாயம் நன்றாக செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் அதற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை.
குறிப்பாக, 5வது போட்டியில் இந்திய அணி 3/91 என இருந்து பின்னர் 6/132 என்ற நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர்கள் தான். ஆதலால், 273 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்காக மாறியது.
கெதர் மற்றும் புவனேஸ்வர்குமார் இருவரும் சற்று சமாளித்தாலும், நீண்டகாலம் நிலைக்க முடியவில்லை.
இந்த போட்டியில் மட்டுமல்ல, இந்த தொடரிலேயே ஸ்பின்னர்கள் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.