சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இந்திய அணியின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கியவர்கள். இருவரும் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் 29,000 ரன்கள் மற்றும் 87 சதங்கள் குவித்துள்ளனர். சச்சின் எப்படி சீராக விளையாடும் ஆட்டக்காரர் என்பது நாம் அறிந்ததே. அதைக்காட்டிலும் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்தவர் என்பது எவராலும் மறுக்கமுடியாதது. அவரின் அபார பேட்டிங் திறனை கண்டு உலகின் பல வல்லுனர்களும் வியந்துள்ளனர். சச்சினைக் காட்டிலும் டிராவிட் மெதுவாக விளையாட கூடிய ஆட்டக்காரராக இருந்தாலும், சச்சினைக் காட்டிலும் பல மடங்கு ரன்களை எடுக்கும் வல்லமை பெற்றவர். இந்நிலையில் இந்த தொகுப்பில் கிரிக்கெட் உலக ஜாம்பவானான சச்சினால் டெஸ்ட் போட்டிகளில் படைக்கமுடியாத பல சாதனைகளை டிராவிட் படைத்துள்ளார். அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
#2) இரண்டு இன்னிங்சிலும் சதமடித்தது!!!
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் வீரர் சதம் அடிப்பது என்பதே கடினம் தான். அதிலும் இரண்டு இன்னிங்சிலும் சதமடிப்பது என்பது மிகவும்கவும் அரிது. ஆனால் இங்த சாதனையை ஒருசில வீரர்களால் மட்டுமே படைக்க முடியும். இதனை படைத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார் டிராவிட். 1999 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸ்-ல் 190 ரன்கள் குவித்து அசத்தினார் டிராவிட். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்சிலும் அதே வேகத்துடன் 103* ரன்கள் குவித்து இந்த சாதனையை படைத்தார் இவர். அதுமட்டுமல்லாமல் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்து இந்த சாதனையை இரண்டு முறை படைத்தார். 200 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கரால் இந்த சாதனையை ஒருமுறை கூட படைக்க முடியவில்லை.
#3) ஒரே இன்னிங்சில் 250 ரன்கள் அடித்தது
சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் ஆறு முறை இரட்டை சதமடித்துள்ளார். ஆனால் அதனை அவரால் அதனை ஒருமுறை கூட முச்சதமாக மாற்ற முடியவில்லை. ஏன் அந்த 200-ஐ அவரால் 250 ஆக கூட மாற்ற முடியவில்லை. அதற்குள் தனது விக்கெட்டினை இழந்துவிடுவார் டெண்டுல்கர். 2004 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிரான 248* ரன்கள் குவித்ததே டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு அதிகபட்சமாகும். ஆனால் டிராவிட் பாகிஸ்தான் மண்ணிலேயே 270 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அந்த போட்டியில் இவரின் இன்னிங்க்ஸை இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. இதுவே இவரின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாகும். சச்சின் 200 ரன்களை அடித்தாலும் டிராவிட் போல அவரால் அதனை 250 ரன்களாக மாற்ற முடியவில்லை.
#2) டெஸ்ட் போட்டிகளில் 30,000 பந்துகளை சந்தித்தது
டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு ரன்கள் குவிக்கிறோம் என்பதை காட்டிலும் எவ்வளவு பந்துகளை களத்தில் சந்திக்கிறோம் என்பதே முக்கியமானது. ஏனென்றால் இது 5 நாட்கள் நடைபெற கூடிய போட்டியாகும். எனவே களத்தில் விளையாடும் வீரர்கள் நிலைத்து ஆடினால் மட்டுமே அணியின் தோல்வியை கூட தவிர்க்க முடியும். இந்தவகையில் பார்க்கும் போது "தடுப்பு சுவர்" என அழைக்கப்படுபவர் டிராவிட். இவர் இப்படி அழைக்கப்படுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். இவரை கண்டாலே பந்துவீச்சாளர்கள் அனைவரும் நடுங்குவார்கள் அந்த அளவுக்கு நிலைத்து ஆடும் வல்லமை பெற்றவர். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இவர் 30,000 பந்துகளை சந்தித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை சச்சின் மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிப்பது மிகவும் கடினமே.
#1) டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும், அனைத்து நாட்டு மைதானத்திலும் சதமடித்த வீரர்!!!
டெஸ்ட் போட்டி விளையாடும் 10 அணிகளுக்கெதிராகவும் சதமடித்த ஒரே இந்தியர் டிராவிட். அவர் எதிர்கொண்ட அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டி விளையாடும் அணைத்து நாடுகளின் மைதானங்களில் இவர் சதமடித்துள்ளார். இந்தவகையில் பார்க்கும் போது சச்சின் 10 அணிகளில் 9 அணிகளுக்கு எதிராக சதம் விளாசியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிரான மட்டும் இவரால் சதம் அடிக்க முடியவில்லை. இதுவரை அவர் 4 போட்டிகள் அந்த அணிக்கெதிரான விளையாடியுள்ளார். அதில் அதிகபட்சமாக இவர் அடித்தது 74 ரன்கள் தான்.