#2) டெஸ்ட் போட்டிகளில் 30,000 பந்துகளை சந்தித்தது
டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு ரன்கள் குவிக்கிறோம் என்பதை காட்டிலும் எவ்வளவு பந்துகளை களத்தில் சந்திக்கிறோம் என்பதே முக்கியமானது. ஏனென்றால் இது 5 நாட்கள் நடைபெற கூடிய போட்டியாகும். எனவே களத்தில் விளையாடும் வீரர்கள் நிலைத்து ஆடினால் மட்டுமே அணியின் தோல்வியை கூட தவிர்க்க முடியும். இந்தவகையில் பார்க்கும் போது "தடுப்பு சுவர்" என அழைக்கப்படுபவர் டிராவிட். இவர் இப்படி அழைக்கப்படுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். இவரை கண்டாலே பந்துவீச்சாளர்கள் அனைவரும் நடுங்குவார்கள் அந்த அளவுக்கு நிலைத்து ஆடும் வல்லமை பெற்றவர். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இவர் 30,000 பந்துகளை சந்தித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை சச்சின் மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிப்பது மிகவும் கடினமே.
#1) டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும், அனைத்து நாட்டு மைதானத்திலும் சதமடித்த வீரர்!!!
டெஸ்ட் போட்டி விளையாடும் 10 அணிகளுக்கெதிராகவும் சதமடித்த ஒரே இந்தியர் டிராவிட். அவர் எதிர்கொண்ட அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டி விளையாடும் அணைத்து நாடுகளின் மைதானங்களில் இவர் சதமடித்துள்ளார். இந்தவகையில் பார்க்கும் போது சச்சின் 10 அணிகளில் 9 அணிகளுக்கு எதிராக சதம் விளாசியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிரான மட்டும் இவரால் சதம் அடிக்க முடியவில்லை. இதுவரை அவர் 4 போட்டிகள் அந்த அணிக்கெதிரான விளையாடியுள்ளார். அதில் அதிகபட்சமாக இவர் அடித்தது 74 ரன்கள் தான்.