85 (115 பந்துகள்) vs பாகிஸ்தான் (2011 உலகக் கோப்பை)
இந்த இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கருக்கு நிறைய விக்கெட்டுகள் பாகிஸ்தான் வீரர்களால் மிஸ் செய்யப்பட்டது. முதலில் ஒரு எல்.பி.டபுள்யு, அடுத்தது ஒரு ஸ்டம்பிங் மிஸ், மற்றும் இரண்டு முறை கேட்ச் மிஸ் ஆகியன ஆகும். இருப்பினும் சச்சின் டெண்டுல்கரால் அந்த போட்டியில் சதம் விளாச முடியவில்லை.
அவர் 85 ரன்களில் இருந்த போது ஆஃப் ஸ்பின் ஷாய்ட் அஜ்மல் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் சச்சின் டெண்டுல்கர். ஓவர் பிட்சில் வந்த பந்தை நேராக பேட் கொட்டு விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அந்த பந்து அஃபிரிடியின் கைகளில் சென்றது. 85 ரன்களுடன் நடையைக் கட்டினார் சச்சின் டெண்டுல்கர்.
இருப்பினும் சச்சினின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 260 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
97(120 பந்துகள்) vs இலங்கை (2003 உலகக் கோப்பை)
இந்த இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் சதத்திற்கு மிக அருகில் சென்று தனது விக்கெட்டை இழந்தார். 2003 உலகக் கோப்பை தொடரில் தனது அதிகபட்ச ரன்னான 97 ரன்களை இலங்கைக்கு எதிராக அடித்தார். ஜமிந்தா வாஸ் மற்றும் தில்ஹாரா பெர்னான்டோவின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டார் சச்சின் டெண்டுல்கர். சதம் அடிக்கும் முயற்சியில் விளையாடிக் கொண்டிருந்தார் சச்சின்.
சச்சின் 90 ரன்கள் அடித்த பிறகு தடுமாற ஆரமித்தார். இதனை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் அரவிந்த் தி செல்வா பயன்படுத்தி கொண்டார். 97 ரன்களில் இருந்த போது கீழாக வந்த பந்தை சச்சின் சுழற்றிய போது டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா-விடம் பந்து சென்றது. இந்த இன்னிங்ஸில் சச்சினின் மோசமான ஷாட்டால் தனது சதத்தை தவறவிட்டார் சச்சின் டெண்டுல்கர்.