ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்

Sachin Tendulkar & Sourav Ganguly
Sachin Tendulkar & Sourav Ganguly

இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் செல்ல உள்ளது. இதில் முதல் தொடராக டி20 ஆகஸ்ட் 3 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி குறிப்பிட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் வகைகளான ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் சிறந்த ஆட்டத்திறனுடன் செயல்படும். இதற்கு சான்றாக சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இந்தியா வென்றதை கூறலாம். உலக கிரிக்கெட்டை ஆண்டு வரும் இந்திய அணி 2006ற்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததில்லை. இதற்கு காரணம் மேற்கிந்தியத் தீவுகளின் பெரும் கிரிக்கெட் வீரர்களாக வலம் வந்த பிரைன் லாரா, ராம்நரேஷ் சர்வான் மற்றும் சிவ்ரநைன் சந்தர்பால் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதுதான்.

மறுமுனையில் இந்திய அணி நிர்வாகம் புதிய மற்றும் திறமை மிக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அடையாளம் கண்டு அந்நிய நாடுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் நிலைநாட்டுகிறது. அத்துடன் 2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் தோல்வியடைந்து இந்திய வெளியேறிய காரணத்தால் அதனை மறைவுக்கு கொண்டு வர இந்திய அணிக்கு பல வெற்றிகள் தேவைப்படுகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று முழு உத்வேகத்துடன் செயல்படுவார்கள் எனத் தெரிகிறது. கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சில டாப் கிரிக்கெட் வீரர்கள் சதம் அடிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நாம் இங்கு ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளில் சதம் விளாசாத 4 டாப் பேட்ஸ்மேன்களைப் பற்றி காண்போம்.


#4 ரோகித் சர்மா

Rohit Sharma
Rohit Sharma

2019 உலகக்கோப்பை தொடரின் அதிரடி நாயகன் இந்தியாவின் "ஹீட்மேன்" ரோகித் சர்மா. இந்த தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்று 70 சராசரியுடன் 648 ரன்களை ரோகித் சர்மா விளாசினார்‌. இதன்மூலம் அளவு கடந்த நம்பிக்கையை அவர் தன் மேல் கொண்டுள்ளார். இவர் கண்டிப்பாக எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த அணியின் சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு மிகப்பெரிய தொடக்க ஆட்டக்காரராக உலகில் வலம் வரும் ரோகித் சர்மா இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் சதம் விளாசதது சற்று ஆச்சரியமாத்தான் உள்ளது.

இவர் 2007ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்று ஒரு சில போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் கரேபியன் மண்ணில் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர் ஆனால் பெரிய இன்னிங்ஸாக வெளிபடுத்த தவறியுள்ளனர். ரோகித் சர்மா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 14 போட்டிகளில் பங்கேற்று 54.33 சராசரியுடன் கிட்டத்தட்ட 500 ரன்களை நெருங்கியுள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். ரோகித் சர்மா மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் விளையாடி கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு மேலாக இருக்கும். எனவே கரேபியின் நாட்டில் ரோகித் சர்மாவின் முதல் சதம் கூடிய விரைவில் காணலாம்.

#3 ஷீகார் தவான்

The man for big tournaments for India is recovering from a thumb injury and is part of the squad for the West Indies series
The man for big tournaments for India is recovering from a thumb injury and is part of the squad for the West Indies series

ஐசிசி தொடர்களின் ஜாம்பவானான ஷீகார் தவான் சமீபத்திய உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். தற்போது காயத்திலிருந்து ணரமீண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஷீகார் தவான் 3 முறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் 2013ல் நடந்த முத்தரப்பு தொடரும் அடங்கும். ஒருநாள் தொடரில் தவானின் சராசரி 45ற்கும் அருகில் உள்ளது. கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் ஷீகார் தவானுக்கு சரியாக அமைந்ததில்லை.

கரேபியன் மண்ணில் இவர் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட முதல் தொடரில் 1 அரைசதம் மட்டுமே அடித்தார். 2013 சேம்பியன் டிராபியில் அதிக ரன்களை குவித்த ஷீகார் தவான் அதற்கு பின் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த தொடரில் 5 போட்டிகளில் 135 ரன்களை மட்டுமே அடித்தார். 2017ல் கரேபியன் மண்ணில் நடந்த தொடரில் சற்று மேம்பட்ட விதமாக 87 மற்றும் 67 ரன்களை குவித்து தவானின் பேட்டிங் தென்பட்டது. ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஷீகார் தவான் 14 போட்டிகளில் பங்கேற்று 26.07 சராசரியுடன் 4 அரைசதங்களை அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தவானின் குறைவான ரன்கள் இதுவாகும். எதிர்வரும் தொடரில் இவரிடமிருந்து ஒரு பொறுப்பான ஆட்டம் வெளிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#2 சவ்ரவ் கங்குலி

Sourav Ganguly
Sourav Ganguly

சவ்ரவ் கங்குலி 1997 மற்றும் 2002ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அத்துடன் 2007ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலகக்கோப்பை தொடரிலும் கங்குலி பங்கேற்றார். கரேபியன் மண்ணில் கங்குலி முதன்முதலாக களமிறங்கும் போது ஒருநாள் தொடரில் அதிக ரன்களை குவித்தார். 2002ல் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கங்குலி இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தியதுடன் ரன் குவிப்பிலும் அசத்தினார்.

இத்தொடரிலும் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையுடன் வெகு நாட்களுக்கு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் தொடரை கைப்பற்றினார் கங்குலி. 2007 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆரம்பத்திலேயே வெளியேறிருந்தாலும் கங்குலி தான் விளையாடிய 3 போட்டிகளில் 2 அரைசதங்களை விளாசினார். ஆனால் எதிர்பாராத விதமாக கரேபியன் மண்ணில் கங்குலி சதம் விளாச தவறினார். மேற்கிந்திய தீவுகளில் கங்குலி 9 போட்டிகளில் பங்கேற்று 52.50 சராசரியுடன் 420 ரன்களை குவித்துள்ளார். கங்குலியின் பேட்டிங் சராசரி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மட்டுமே 50+ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. (கென்யாவைத் தவிர)


#1 சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar
Sachin Tendulkar

ஆல்-டைம் அதிக மதிப்பிடப்பட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். அவற்றுள் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் ஆகியவை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது. இருப்பினும் தனது 24 வருட கிரிக்கெட் வாழ்வில் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒரு ஓடிஐ சதத்தினை கூட சச்சின் டெண்டுல்கர் அடித்ததில்லை என்பது உலகில் பல ரசிகர்களுக்கு தெரியாத உண்மையாகும்.

1997 மற்றும் 2002ல் இந்தியா மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த போது சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தார். 2006ல் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை. 3 போட்டிகளுடன் இந்திய அணி ஆரம்பத்திலேயே வெளியேறிய 2007 உலகக்கோப்பை தொடரிலும் சச்சின் டெண்டுல்கர் சாதிக்கவில்லை. எதிர்பார விதமாக மேற்கிந்தியத் தீவுகளில் சச்சின் விளையாடிய கடைசி ஒருநாள் தொடராகவும் இது அமைந்தது. இவர் கரேபியன் மண்ணில் 9 போட்டிகளில் பங்கேற்று 47 சராசரியுடன் 282 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 65 ரன்கள் விளாசினார். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் மூன்று அரைசதங்களை குவித்த சச்சின் டெண்டுல்கரால் சதம் விளாசும் வாய்ப்பு இறுதி வரை கிடைக்காமலே போனது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now