#3 ஷீகார் தவான்
ஐசிசி தொடர்களின் ஜாம்பவானான ஷீகார் தவான் சமீபத்திய உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். தற்போது காயத்திலிருந்து ணரமீண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஷீகார் தவான் 3 முறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் 2013ல் நடந்த முத்தரப்பு தொடரும் அடங்கும். ஒருநாள் தொடரில் தவானின் சராசரி 45ற்கும் அருகில் உள்ளது. கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் ஷீகார் தவானுக்கு சரியாக அமைந்ததில்லை.
கரேபியன் மண்ணில் இவர் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட முதல் தொடரில் 1 அரைசதம் மட்டுமே அடித்தார். 2013 சேம்பியன் டிராபியில் அதிக ரன்களை குவித்த ஷீகார் தவான் அதற்கு பின் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த தொடரில் 5 போட்டிகளில் 135 ரன்களை மட்டுமே அடித்தார். 2017ல் கரேபியன் மண்ணில் நடந்த தொடரில் சற்று மேம்பட்ட விதமாக 87 மற்றும் 67 ரன்களை குவித்து தவானின் பேட்டிங் தென்பட்டது. ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஷீகார் தவான் 14 போட்டிகளில் பங்கேற்று 26.07 சராசரியுடன் 4 அரைசதங்களை அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தவானின் குறைவான ரன்கள் இதுவாகும். எதிர்வரும் தொடரில் இவரிடமிருந்து ஒரு பொறுப்பான ஆட்டம் வெளிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.