#2 சவ்ரவ் கங்குலி
சவ்ரவ் கங்குலி 1997 மற்றும் 2002ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அத்துடன் 2007ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலகக்கோப்பை தொடரிலும் கங்குலி பங்கேற்றார். கரேபியன் மண்ணில் கங்குலி முதன்முதலாக களமிறங்கும் போது ஒருநாள் தொடரில் அதிக ரன்களை குவித்தார். 2002ல் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கங்குலி இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தியதுடன் ரன் குவிப்பிலும் அசத்தினார்.
இத்தொடரிலும் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையுடன் வெகு நாட்களுக்கு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் தொடரை கைப்பற்றினார் கங்குலி. 2007 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆரம்பத்திலேயே வெளியேறிருந்தாலும் கங்குலி தான் விளையாடிய 3 போட்டிகளில் 2 அரைசதங்களை விளாசினார். ஆனால் எதிர்பாராத விதமாக கரேபியன் மண்ணில் கங்குலி சதம் விளாச தவறினார். மேற்கிந்திய தீவுகளில் கங்குலி 9 போட்டிகளில் பங்கேற்று 52.50 சராசரியுடன் 420 ரன்களை குவித்துள்ளார். கங்குலியின் பேட்டிங் சராசரி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மட்டுமே 50+ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. (கென்யாவைத் தவிர)
#1 சச்சின் டெண்டுல்கர்
ஆல்-டைம் அதிக மதிப்பிடப்பட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். அவற்றுள் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் ஆகியவை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது. இருப்பினும் தனது 24 வருட கிரிக்கெட் வாழ்வில் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒரு ஓடிஐ சதத்தினை கூட சச்சின் டெண்டுல்கர் அடித்ததில்லை என்பது உலகில் பல ரசிகர்களுக்கு தெரியாத உண்மையாகும்.
1997 மற்றும் 2002ல் இந்தியா மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த போது சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தார். 2006ல் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை. 3 போட்டிகளுடன் இந்திய அணி ஆரம்பத்திலேயே வெளியேறிய 2007 உலகக்கோப்பை தொடரிலும் சச்சின் டெண்டுல்கர் சாதிக்கவில்லை. எதிர்பார விதமாக மேற்கிந்தியத் தீவுகளில் சச்சின் விளையாடிய கடைசி ஒருநாள் தொடராகவும் இது அமைந்தது. இவர் கரேபியன் மண்ணில் 9 போட்டிகளில் பங்கேற்று 47 சராசரியுடன் 282 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 65 ரன்கள் விளாசினார். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் மூன்று அரைசதங்களை குவித்த சச்சின் டெண்டுல்கரால் சதம் விளாசும் வாய்ப்பு இறுதி வரை கிடைக்காமலே போனது.